Wednesday, October 26, 2011

வெள்ளிக்கிழமை / ஜும்ஆ நாளின் சிறப்பு..


ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டை...க் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)
ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)

மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள்.

”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள். அதற்கு, ”நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கிறார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)” என்று பதில் சொன்னேன். ”உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்”. (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ)

எனவே எந்தப்பள்ளி வாயிலுக்குள் நுழைந்தாலும் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்காருவது கூடாது.

வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்

Saturday, October 22, 2011

ஹாஜிகள் கவனத்திற்கு


ஹஜ்ஜின் நிபந்தனைகள் – 
1.முஸ்லிமாக இருத்தல் 2.புத்தி சுவாதீனமாக இருத்தல் 3.சுதந்திரமானவனாக இருத்தல் (அடிமையாக இல்லாதிருத்தல்) 4.பருவ வயதை அடைந்திருத்தல் 5.உடல் வலிமையும் பணவலிமையும் பெற்றிருத்தல் 6.ஒரு பெண் மஹ்ரமுடன் (அனுமதிக்கப்பட்டவருடன்) ஹஜ்ஜு செய்தல்.


ஹஜ்ஜின் ருக்னுகள் – 4 

1. இஹ்ராம் கட்டுவது
2. அரஃபாவில் தங்குவது
3.தவர்ஃபுல் இஃபாளா செய்வது.
4.ஸஃபா மர்வாவுக்கிடையே ஸயீ சய்வது

இவற்றுள் ஏதேனும் ஒன்றை விட்டாலும் ஹஜ் நிறைவேறாது

ஹஜ்ஜின் வாஜிபுகள்-7
1. மீக்காத்து எல்லையிலிருந்து இஹ்ராம் கட்டுவது.
2. சூரியன் மறைவது (அஸ்தமனம்) வரை அரஃபாவில் தங்குவது.
3. முஸ்தலிஃபாவில் இரவு தங்குவது.
4. அய்யாமுத்தஷ்ரீக்உடைய நாட்களில் ( பிறை 11,12,13) மினாவில் தங்குவது.
5. மூன்று ஜம்ராக்களில் கல் எறிவது .
6. தலை முடியைச் சிரைப்பது அல்லது (முழுவதும்) வெட்டுவது.
7. தவாபுல் விதாஃ (பயண தவாஃப்)

இவற்றுள் ஏதேனும் ஒன்று விடுபட்டு விட்டால் பிராயச் சித்தமாக தமு கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஹஜ்ஜு நிறை வேறிவிடும்.
தமு என்பது மிருக பலியோ ஆறு ஏழைகளுக்கு உணவளிக்கவோ மூன்று நாட்களக்கு நோன்பு நோற்கவோ செய்வதற்குச் சொல்லப்படும்.


மனதிற் கொள்ளவேண்டியவை



1.அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவதாக (இக்லாஸான)தூய்மையான நிய்யத் வைப்பது.
2. ஹஜ்ஜு சம்பந்தமான சட்டங்களை சரியான முறையில் தெரிந்து நபி (ஸல்) காட்டிய முறைப்படி செய்வது. இதில் தம் விருப்பப்படி செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது.

3.இதய பூர்வமாக பாவ மன்னிப்புக் கோருவது.
இதன் நிபந்தனைகள்-
1. செய்து வந்த பாவங்களை முற்றிலுமாக விடுதல
2.அதற்காக மனமுருகுதல்
3. மீண்டும் அப்பாவங்களை செய்யவோ எண்ணவோ கூடாது என மன
உறுதி கொள்ளல்.
4. பிறருக்குச்செலுத்தவேண்டிய (ஹக்குகளை) பாத்தியதைகளை உரியவர்களிடம் சேர்பித்தல்.

அதாவது : பிறருக்குச் செலுத்தவேண்டிய ஹக்குகளை (கடமைகளை) நிறைவேற்றுவதும், அநியமாக அபகரிக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைப்பதும் கடன்களை வாங்கியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அதற்காக சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக்கோருவதும் ஹஜ்ஜு ஏற்கப்படுவதற்குpய விதிகளாகும். (இவை நான்கும் தவ்பா ஏற்றுக்கொள்வதற்குரிய விதிகளாகும்.)
4. பெற்றோரின் திருப்தியைப்பெறுவதும் மனைவி கணவரின் அனுமதியைப் பெறுவதும் மிகவும் இன்றியமையாததாகும்.
5. ஹஜ்ஜுக்குரிய செலவுகள் யாவும் ஹலாலான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.
6. வஸிய்யத் ஏதும் செய்வதாயின் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்.
7. எல்லோருடனும் நல்லுறவோடும் இண்க்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
8. ஹஜ்ஜ்{டைய அமல்களை பாழ்படுத்தும் வீணான எந்தச்செயலிலும் பேச்சிலும் பிறரைப்புண்படுத்துவதிலும் ஈடுபடாமலிருத்தல் வேண்டும்.
9. பயண ஒழுங்குகளை கடைபிடிக்கவேண்டும்.
10. கவனம் முழுவதும் வணக்க வழி பாடுகளிலும், குர்ஆன் ஓதுவதிலும், நபி(ஸல்) காட்டிய திக்ருகளை மட்டும் ஓதுவதிலும் இருக்க வேண்டும்.
11. நல்லவற்றைப் பேசுவதிலும், தாம் செயலாற்றுவதோடு மட்டுமின்றி பிறரையும் நல் அமல் செய்யத்தூண்ட வேண்டும்.
12. அய்யமுத்தஷரீக்குடைய நாட்களிலும், முஸ்தலிஃபாவிலும், குறிப்பாக அரஃபாவுடைய நாளிலும் அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைத்துப் பாவ மன்னிப்புக் கோருதல்.
13. சிறு தவறுகள் கூட நிகழா வண்ணம் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்.
14. இவ்விதிகள் யாவும் பேணப்பட்டால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு ‘ஹஜ்ஜு மப்ரூராக (ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக)’ ஏற்றுக் கொள்ளப்படும்.

ஹஜ்ஜு முடிந்ததும் தமது ஹஜ்ஜு ஏற்கப்பட்டு விட்டதாக இறுமாந்து விட வேண்டாம். மவ்த்து வரை உங்கள் அமல்களை எடை போட்ட பிறகே ஹஜ்ஜு ஏற்கப்படுவதும் ஏற்கப்படாததும் தீர்மானிக்கப்படும் என்ற இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்களின் அறிவுரை இங்கே மிகவும் சிந்திக்கத்தக்கதாகும்.


செய்யக்கூடாதவை :-

முடியை வெட்டுதல் அல்லது பிடுங்குதல் நகத்தை வெட்டுதல் ஆண்கள் தலையை மறைத்தல் நறுமணம் பூ}சுதல் ஆண்கள் தையலுள்ள ஆடையை அணிதல்.
(குறிப்பு: தடுக்கப்பட்ட இவற்றுள் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்தால் பிராயசித்தமாக ஒரு ஆட்டை அறுத்துப்பலி கொடுக்கவோ, ஆறு ஏழை களுக்கு உணவு கொடுக்கவோ, மூன்று நாட்கள் நோன்பு நோற்கவோ செய்ய வேண்டும்.)
by Dr. Ahmad Baqavi PhD.

Friday, October 21, 2011

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள்


"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?
முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.
அதை எப்படி கண்டுபிடிப்பது..?
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.
 
அறிகுறிகள் இருக்குமா..?
இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.
எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?
தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.
தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?
அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
உணவு முறைகள் என்ன?
எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?
வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?
அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?
வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?
முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.
சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.
இல்லாவிட்டால்...
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.
அப்புறம்...
இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.
இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?
இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.
கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?
என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?
முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

Tuesday, October 11, 2011

வாகன மோட்டார் எண்ணெய் குடிக்கும் மனிதர்


சவுதி ஆரேபிய நாட்டை சேர்ந்தவர் மெஹமட் ஓமர்இவர் ஒருவாகன திருத்த வேலைகள் மேற்கொள்ளும் மெக்கானிக் ஆவார்.இவர் தினமும் இரண்டு முதல் நான்கு கேன்கள் வாகனமோட்டார் எண்ணெய் குடிக்கின்றார்.

http://www.manithan.com/news/data/upimages/cress_man_002.jpg
இது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவாஇதுபற்றிசவுதிஆரேபியாவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்று இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் அல்லாமல்கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ்  தினமும் 2.5 கிலோசாப்பிட்டு வருகிறார்.

http://www.manithan.com/news/data/upimages/cress_man_003.jpg
இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள்செலவழிப்பதாகவும்இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றிஉலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-------------------------------------------------------------------------------------------சமீபத்தில் சவுதியில் தமிழ் நாட்டை சேர்ந்த மெக்கானிக் பிரேக் ஆயில் குடித்தால் தோல் வியாதி குணமாகும் என்று யாரோ சொல்ல அந்த சகோதரரும் பிரேக் ஆயில் குடித்திருக்கிறார். கிட்னி, இதயம் பாதிக்கப்பட்டு மறு வாரம் இறந்து விட்டார்.  


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எச்சரிக்கையாக இருக்கவும்.

Saturday, October 1, 2011

யார் இந்த ஹாஜா மொஹிதீன்?


இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார்?

தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை யாரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.

காஜா மொய்தீனின் கையில் எப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்களைக் குறித்துக் கொள்கிறார். பின்னர், அவர்கள் போகவேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர் குறித்த விவரங்களைத் தெளிவான விலாசத்தோடு அவர்களது தொடர்பு எண்களைச் சொல்லி, தன்னிடம் போனில் பேசுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

பேசியவர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்களை எங்கே போகச் சொல்கிறார்? யாரைப் பார்க்கச் சொல்கிறார்?

மேஜர் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை, உயிர்வாழ மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம், அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் - இதுமாதிரி அவசரச் சந்தர்ப்பங்களில் அனாதரவாக நிற்பவர்கள் எல்லாம் காஜா மொய்தீனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் உதவி கேட்டு போன் செய்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் இல்லைதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் ஆபரேஷனுக்கோ அல்லது மாற்றுக் கிட்னி பொருத்தவோ, ஆஸ்பத்திரிச் செலவுகளுக்கோ அவர்கள் யாரைத் தொடர்புகொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். உயிர் காப்பதற்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களிடம், உரிய சமூக சேவை நிறுவனங்களிடம் அல்லது மருத்துவ உதவி புரியும் டிரஸ்ட்களிடம் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் காஜா மொய்தீன்.

சமீபத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் நோயாளிகள் எப்படி உதவிகளைப் பெறலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார். அவசியம் ஏற்பட்டால் நேரடியாக இவரே போய் முன்னின்று நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உரிய விதத்தில் அவர்கள் பலன் பெற உதவி புரிகிறார். இதற்கெல்லாம் இவர் வசூலிக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? “அன்பு ஒன்றைத்தான் கட்டணமாகப் பெறுகிறேன். அவர்கள் குணமடைந்து வீடு திரும்புகிறபோது அன்போடு சொல்கிற நன்றிகள் கோடி பெறுமே” என்று அமைதியாகச் சிரிக்கிறார் காஜா மொய்தீன். இப்படி இவரால் இதுவரை மேஜர் ஆபரேஷன்கள் செய்துகொண்டு பலனும், நலனும் பெற்றவர்களின் எண்ணிக்கை 800.

பத்தொன்பது வருடங்களாக இடைவிடாமல் தொடரும் இந்தச் சேவையில், கூடுதலாக தனக்குத் தோன்றிய இன்னொரு சேவைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் காஜா மொய்தீன். அந்தத் திட்டத்திற்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான்: ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’. இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, அதில் தங்களையும் இணைத்துக் கொண்ட கோவையைச் சேர்ந்த ஜெயகாந்தன், செந்தில்குமார், ஸ்டீபன், ராஜசேகர் ஆகிய நண்பர்கள் இவருக்குப் பக்கபலம். இவர்களின் துணையோடு, ஆபரேஷனுக்காக உதவி கேட்டுவரும் நோயாளி எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,

சிகிச்சைக்கான செலவுத் தொகை எவ்வளவு என்பதை கேட்டுக்கொள்கிறார். அத்தனை விவரங்களையும் ஒருபக்க அளவுக்கு நோட்டீஸாக அடித்து, கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை அணுகி, அந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்களிடம் அதையொரு கோரிக்கையாக முன்வைக்கிறார். ‘ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும். உங்கள் அனைவரின் உதவியாலும் ஓர் உயிர் பிழைக்கப்போகிறது’ என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்கிறார். அங்கேயே ஒரு உண்டியலையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்.

ஆபரேஷன் தேதிக்கு முன்னதாக அங்கே மறுபடி சென்று அதுவரை சேர்ந்திருக்கும் பணத்தை, தன் கையால் தொடாமல் அந்த மாணவர்களில் இரண்டு பேரின் உதவியோடு சேகரிக்கிறார். அருகிலுள்ள வங்கிக்குச் சென்று, கிடைத்த தொகையை ஆஸ்பத்திரியின் பெயருக்கே டி.டி.யாக எடுத்துக் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார். இப்படி இவரது உதவியால், மிகச் சமீபத்தில் சிவநேசன் என்ற சிறுவனுக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த துளையை அடைக்க கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியிலும், நதியா என்ற பள்ளி மாணவிக்கு மூளைக்கு அருகில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற கோவை மெடிக்கல் சென்டரிலும் வெற்றிகரமாக ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன. இதற்கான மருத்துவச் செலவுகளுக்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மற்றும் பி.எல்.பி. கிருஷ்ணம்மாள், எஸ்.எஸ்.என்.ராஜலட்சுமி, பிஷப் அப்பாசாமி, கிருஷ்ணா கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் ‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’ திட்டத்தின்கீழ் உதவி புரிந்திருக்கிறார்கள்.

இந்தப் புதுமையான மருத்துவச் சேவைக்கு கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். தமிழ்நாடு முழுக்க உள்ள கல்லூரிகளுக்கு விசிட் அடித்து, பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றுவதையே தன் வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கும் காஜா மொய்தீனின் அடுத்த திட்டம். கல்லூரி மாணவர்கள் மூலம் பத்து லட்ச ரூபாய் வசூலித்து, கோவையில் இரண்டு டயாலிசிஸ் கருவியைப் பொருத்துவதுதான்.
“திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு என்று பல ஊர்களில் இருந்தும் கிட்னி செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் செய்ய இரண்டு நாளைக்கொரு முறை கோவைக்கு வந்து, படும் சிரமங்களைப் பார்த்த பின்புதான் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவர நினைத்தேன். இன்னும் மூன்று மாதங்களில் அதை நிறைவேற்றி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் திடமாக.

தனிமரம் தோப்பாகாது என்பது பழைய மொழி. தனிமனிதன் நினைத்தால் ஒரு தோப்பையே உருவாக்க முடியும் என்பது புது மொழி. அதை, உயிர் காக்கும் சேவை மூலம் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் காஜா மொய்தீன். 


வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி!

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.
குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.
புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.
-----------------------------------------------------------------------------------
முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கானPCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate 
க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 
செ.மீ அளவு புகைப்படம் ஒட்டிநிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும்இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Cardநகல்)சமர்ப்பிக்க வேண்டும்.
காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdf
காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.
http://passport.gov.in/cpv/FeeStructure.htm
காலையில் விண்ணப்பித்தால் மாலை மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC 
குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm
விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.
மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html
மதுரைதேனிசிவகங்கைவிருதுநகர்ராமநாதபுரம்தூத்துக்குடிதிருநெல்வேலி,கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சிகரூர்நாகப்பட்டினம்பெரம்பலூர்புதுக்கோட்டைதஞ்சாவூர்அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018

Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html
கோயம்புத்தூர்ஈரோடுநாமக்கல்சேலம்திருப்பூர்நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767

E-mail : rpo.chennai@mea.gov.in Website: http://passport.tn.nic.in/about_us.htm
சென்னைகடலூர்தர்மபுரிகாஞ்சிபுரம்காரைக்கால்கிருஷ்ணகிரிபாண்டிச்சேரி,திருவள்ளூர்திருவண்ணாமலைவிழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Friday, September 30, 2011

காங்கிரசின் பினாமியா அட்வகேட் முனாப்!

கே கே ஹாஜா அவர்களுக்கும் மேலேத்தெரு வாடி (எம் எம் எஸ்) வகையரக்களுக்கும் இரகசிய உடன்படிக்கை

மேலேத்தெரு எம் எம் எஸ் வாடி குடும்பத்தினர் கேட்டுகொண்டதினர்கிணங்க அரசியலில் நூறு வருட பெருமைக்குரிய முஸ்லிம் லீக்கின் அதிரை முக்கிய பொறுப்பாளர் கே கே ஹாஜா அவர்கள் தனக்கு கிடைத்த அதிரை பேருர் ஆட்சி தலைவர் போட்டிக்கான வாய்பை, முன்பு சூல் நிலைக்கு ஏற்ப பல கட்சிகளில் அங்கம் வகித்த தற்பொழுது தன்னை முஸ்லிம் லீக்கில் இணைத்துள்ள அதிரை வழக்கறிஞர் (அப்பாவி ) அப்துல் முனாப் அவர்களுக்கு தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை வழங்கியதன் மூலம் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதினால் இதனை தடுக்கவேண்டும் என்ற குறுகிய நோக்கோடு இதை கவனத்தில் கொண்டு எம் எம் எஸ் குடும்பத்தினர், அவர்கலுக்கு நெருங்கிய உறவான கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி நீங்கலும் நம் முஹல்லாவில் நின்றால் நாம் இருவரும் தேர்தலில் தோர்த்து விடுவோம் அந்த வாய்ப்பை நடுத்தெரு சம்சுல் இஸ்லாம் பகுதி உள்ளவர் களுக்கு வழங்கிவிட்டால் நாம் (எம் எம் எஸ் குடும்பத்தினர்) வெற்றிபெற்று விடலாம் நான் வெற்றி பெற்றால் நீங்களும் வெற்றி பெற்றதுவாக இருக்கும் என்று கூறி கே கே ஹாஜா அவர்களை சரிகட்டி உள்ளதாக நம்பதகுங்தா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



 இதனால் வழக்கறிஞர் முனாப் அவர்கள் (கே கே ஹாஜா அவர்களை) நம்பி மோசம் போய் விட்டார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலத்தெரு வாசி நம்மிடையே கூறும் பொழுது 


ஒவ்வொரு சட்ட மன்ற பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் எம் எம் எஸ் வாடிக்கு தேவையானதை அல்லது எதிர் பார்த்ததை கவனமா அவர்கள் வாங்கி கொள்கின்றனர். ஆனால் அதற்காக ஓட்டுப் போட்ட மக்களோ கொசுக்கடியையும், சாக்கடை நாற்றத்தையும் நோய் நொடியையும் தனதாக்கிக் கொள்கின்றனர் என்று தாஜுல் இஸ்லாம் சங்கத்திற்கு கட்டுப் பட்டா ஓர் வாசகர் தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.



இறைநேசன் mohamed 


இப்படி ஒரு செய்தியை மேற்கண்ட நபர் பல வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார்.அவர் கூற்று உண்மையோ-பொய்யோ அல்லாஹ் அறிவான்.இதற்கிடையில் சகோதரர் அட்வகேட் முனாப் அவர்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.அதனை கீழே காணவும். 



முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் சகோ.அட்வகேட் முனாஃப் அவர்கள் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை (30-09-2011) அதிரையின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்ட அறிவிக்கை. அதன் விபரம் வருமாறு:

பேரன்புமிக்க அதிரை நகரப் பெரியோர்களே, வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்ஷா அல்லாஹ், நடைபெறவுள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு உங்கள் நல்வாழ்த்துக்களுடன் போட்டியிட எண்ணியுள்ளேன். அதன் வெற்றியை முறியடிக்கும் கெட்ட நோக்கத்தில் சில குழப்பவாதிகள் நான் M.M.S குடும்பத்தினரால் நிறுத்தப் பட்டுள்ளேன் என்றும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை அவர்களின் பினாமி என்றும் அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

இது முழுமையான பொய் என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் இட்டு என்னால் நிரூபிக்க முடியும். எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நமது ஊர் மக்களின் நன்மையைக் கருதி எந்த குறைபாடுகளும் இல்லாமல் எல்லோரும் வியக்கும் வண்ணம் நம் ஊரின் வளர்ச்சியை செம்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உளத்தூய்மையுடன் அல்லாஹ்விற்காக களம் இறங்கி உள்ளேன்.

உங்களின் மேலான ஒத்துழைப்பை நல்கி வெற்றி பெற உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
A.அப்துல் முனாஃப் B.A.B.L
அட்வகேட் & நோட்டரி பப்ளிக்

சகோதரர்களே அவதூறு குறித்து திருக்குரானும் - நபிகள் நாயகம் ஸல் அவர்களும் பல்வேறு வகைகளில் எச்சரித்துள்ளார்கள்.எனவே மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
அவதூறு சொல்பவர்கள் இந்த லிங்கில் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.



Thursday, September 29, 2011

மனித நேய மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்


 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது  இந்நிலையில் நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு அப்பகுதி முஸ்லிகள் சார்பிலும் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் 22 வது வார்டுக்கு முகமது உசேன், 23 வது வார் டுக்கு முகமது சிராஜ், 8 வது வார்டுக்கு அப்துல் ரஹிம், 4 வது வார்டுக்கு பஷிர் அகமது, 21 வது வார்டுக்கு முஜிபூர் ரகுமான் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர் மேலும் சுயேட்சை வேட்பாளர்களாக 26 வது வார்டுக்கு அன்சாரி, 24 வது வார்டுக்கு ஜிலானி பேகம், 19 வது வார்டுக்கு ஜூனைதா பேகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக்தாவுது தலைமையில் கொத்பாபள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, நெல்லிகுப்பம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்..

Wednesday, September 28, 2011

தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்த்

நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் முஸ்தீபுகளில் முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ள முடிவுகள் பதைக்க வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்தும், பெண்களுக்காக, தலித்களுக்காக என ஒதுக்கியும் ஜெயாவும் கருணாவும் அநியாயம் இழைத்து இருக்கும் பகுதிகள்கூட முஸ்லிம்களின் கையைவிட்டுப் போக வைக்க இருக்கும் நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட எடுத்துள்ள முடிவு, உள்ளாட்சி அமைப்புகளில்கூட இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட இல்லாமலாகும் நிலைக்குக் கொண்டுப் போய் விட்டுவிடுமோ என்று பதைக்க வைக்கிறது.

அம்மா தன் அகங்கார புத்தியினைக் காட்டிக் கூட்டணியினரைக் கழட்டி விட்ட நிலையில், அம்மாவுக்கு எதிராக மூன்றாவது அணி அமைந்திருக்கவேண்டும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி அம்மாவைத் தலைகால் புரியாமல் ஆட வைத்துள்ளது. அந்த வெற்றி தனக்குக் கிடைத்த வெற்றியல்ல; கருணா குடும்பத்துக்கு மக்கள் கொடுத்த மரண அடி என்பதை இந்த ஃபாஸிஸத்தில் ஊறிப்போன அம்மையார் புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின், இரத்தக்காட்டேறி மோடியை அழைத்தது முதல், அந்த மிருகத்தின் கண்துடைப்பு உண்ணாவிரத நாடகத்துக்கு அமைச்சர்களை அனுப்பியதுவரை தெனாவெட்டாக தன்னுடைய ஃபாஸிஸ புத்தியைக் காட்டிவரும் அம்மையாருக்குக் கருணாவுக்குக் கிடைத்த மரண அடியினைப்போன்ற அடியினைக் கொடுக்கவாவது முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்!

ஆனால் நடப்பதோ வேறு!

ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனியாகவும் பாஜக ஒரு அணியாகவும் தேமுதிக ஒரு அணியாகவும் நிற்கும் நிலையில்,

முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனியாக நிற்கிறார்களாம்!

இது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட இவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே!

திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அம்மையார், திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தன் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கோடிகளைச் செலவழித்து வழக்கு நடத்தி இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து கொட்டு வாங்கித் திரும்பியதும் புதிய தலைமை செயலக விஷயத்தில் கோடிகணக்கான மக்கள் வரிப்பணத்தை நாசமாக்கியதன் மூலமும் மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருக்கும் நிலையில், அதிமுகவுக்கு எதிராக அனைவரும் தனித்தனியாக பிரிந்து நின்றால் அது அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா?

அரசியலில் கத்துக்குட்டியான தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனம்(!) கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது!

சுமார் 14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்து களம் காண்கிறார் திருமா. நல்லவேளை, இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது. 
இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் இவர்களின் செயல்பாடே சிறிதாவது சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடாக எனக்குத் தோன்றுகிறது.

அம்மாவின் அணியிலிருந்து வெளியேறி தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறை, அம்மாவுடன் அண்டர் கிரவுண்ட் அட்ஜஸ்ட்மெண்ட் நடத்தியிருக்குமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. ஏனெனில், இவர்கள் தனித்து நிற்பதால், அதன் பலன் நிச்சயம் அம்மையாருக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை.

மமக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும். அல்லாமல், முஸ்லிம்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தங்கள் வேட்பாளர்களையும் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்தால் அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!

என் எண்ணத்தில் ஏதாவது பிழைகள் இருப்பின் சகோதரர்கள் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

- அப்துர் ரஹ்மான்

Sunday, September 25, 2011

குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு


குடிப் பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் கூறும் தீர்வு

படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதை

புகை மற்றும் போதை

ஆல்க்கஹால் கலந்த மவுத்வாஷ் பயன்படுத்தலாமா ?

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 350க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருவள்ளூரை அடுத்த  காக்களூர் அரசு குடோனில் இருந்து திருவள்ளூர்திருத்தணிபள்ளிப்பட்டுபொன்னேரி,கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் திருமழிசை குடோனில் இருந்து பூந்தமல்லிஆவடிஅம்பத்தூர்மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது சுத்தமாக இல்லை. பீர்பிராந்தி பாட்டில்களில் கரப்பான் பூச்சிவண்டுசிகரெட் துண்டுபான்பராக் பாக்கெட்அட்டை துண்டு உள்ளிட்டவை மிதப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் காலி மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பார்கள் சுத்தமாக இருப்பதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. காலி டம்ளர்மது பாட்டில்கள் கண்ட இடங்களில் கிடக்கிறது. பார்களில் நடமாடும் கரப்பான் பூச்சிபல்லிஎறும்பு போன்றவை காலி பாட்டில்களில் புகுந்து விடுகின்றன. அந்த பாட்டில்கள் மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகள்பாட்டில்களை சுத்தம் செய்யாமல் அதில் மீண்டும் மதுபானங்களை நிரப்பி கடைகளுக்கு சப்ளை செய்கிறார்கள். பெரும்பாலானோர் இதை கவனிக்காமல் மதுவை குடிக்கிறார்கள். இதனால் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சுந்தரம் என்பவர்நேற்று பிராந்தி வாங்கியுள்ளார். அதில் அட்டை துண்டு மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.  


Tuesday, September 20, 2011

அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே


நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறு ஏவப்பட்ட முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களைப் பார்த்து, அவர்கள் செய்வது போன்று செய்கின்றனர். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகின்றனர். இதுவும் பித்அத் தோன்றவும், வளரவும் காரணமாக அமைகின்றது.
 
கிறிஸ்தவச் சகோதரர்கள் இயேசு பிறந்த தினத்தைக் “கிறிஸ்மஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதைப் பார்த்த முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, நாம் முஹம்மத்(ஸல்) அவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடாது இருக்கலாமா? எனச் சிந்தித்து “மீலாது-மவ்லித் விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
 
இலங்கை முஸ்லிம்களின் மார்க்க நடைமுறைகளில் தென்னிந்திய முஸ்லிம்களின் தாக்கம் அதிகமாகும். தென்னிந்திய முஸ்லிம்கள்  இந்து சமூகத்தின் மார்க்க நடைமுறைகளை அவதானித்தனர். பொழுது போக்கிற்காகவும், கலை ஆர்வத்திலும் அவர்கள் செய்த அனைத்தும் இவர்களும் சில அறபுப் பெயர்களைச் சூட்டிச் சின்ன சின்ன மாற்றங்களுடன் செய்தனர். அவற்றுக்கு இஸ்லாமிய சாயமும் பூசினர். முஸ்லிம்கள் கோயில்களுக்கும், இந்து மத வழிபாடு நடக்கும் இடங்களுக்குச் சென்று விடாமலிருப்பதற்காக இவற்றை உருவாக்கியதாகக் காரணமும் கூறிக் கொண்டனர்.ஆனால், இன்று இஸ்லாத்திற்கு முரணான இந்து சமயத் தாக்கத்தின் காரணத்தால் தோற்றுவிக்கப்பட்ட சடங்கு-சம்பிரதாயங்களை அகற்றுவதே பெரும் சிரமமாக மாறியுள்ளது.
 
ஒரு கவிஞன் கூறும் போது;
“சடங்கு-சம்பிரதாயங்கள் சட்டைகளாகவே சமூகத்தில் அணியப் பட்டன! காலப்போக்கில் அவை அட்டைகளாக மாறி, இரத்தம் குடிக்கக் கற்றுக் கொண்டன!” என்று கூறிய கூற்று சமூகத்தின் நிதர்சன நிலையாகி விட்டது.
 
அந்நியர்களைப் பின்பற்றுவது எமது சிந்தனையிலும், நடத்தையிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே, இது குறித்து நாம் விழிப்பாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்.அபூவாகித் அல்லைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; “நாம் இஸ்லாத்தை ஏற்ற புதிதில் நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போருக்காகப் போய்க்கொண்டிருந்தோம். (இவர்கள் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தில் இணைந்தவர்கள்.)
நாம் ஒரு மரத்தைக் கடந்து சென்றோம். காஃபிர்கள் ஒரு இலந்தை மரத்தைப் புனிதமாகக் கருதி வந்தனர். அதற்குத் “தாது அன்வாத்” என்பது பெயராகும்.
 
இந்த மரத்திற்குக் கீழே இஃதிகாஃப் இருந்தனர். போருக்குப் போகும் போது இந்த மரத்தில் வாலைக் கொழுகி வைத்து விட்டு எடுத்துச் செல்வர். (அப்படிச் செய்தால் போரில் வெற்றி பெறலாமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.)
எனவே நாம் நபி(ஸல்) அவர்களிடம், “அவர்களுக்கு “தாது அன்வாத்” என்ற மரம் இருப்பது போல், எமக்கும் ஒரு “தாது அன்வாத்” என்ற மரத்தை ஏற்படுத்துங்கள்!” என நபி(ஸல்) அவர்களிடம் நாம் கேட்டோம்.
 
இது கேட்ட நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹு அக்பர்! (அல்லாஹ்வே மிகப் பெரியவன்!) எனக் கூறிப் பின்னர், “பனூ இஸ்ராயீலர்கள் மூஸா நபியிடம் கேட்டது போல் நீங்களும் என்னிடம் கேட்டுள்ளீர்கள். (நாம் கேட்டது பெரிய தவறு என உணர்த்தினார்கள்.)
அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு செய்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தனர். (அவ்வேளை), அவர்கள், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!” என்று கேட்டனர் (7:138) என்ற குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டிய பின்னர் உங்களுக்கு முன்பிருந்தவர்களது வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2180)மேற்படி வசனமும், ஹதீஸும் அந்நியர்களைப் பின்பற்ற முற்படுவது மார்க்கத்திலில்லாத பல வழிபாடுகள் உருவாவதற்கும், சமூகங்களின் அழிவுக்கும் காரணமாக அமையுமென்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
 
பனூ இஸ்ராயீலர்கள் காஃபிர்களைப் பார்த்து விட்டு, அவர்களுக்குப் பல சிலைகளிருப்பது போல் கண்ணால் பார்த்து வணங்கப்படுவதற்கு எமக்கும் ஒரு சிலையிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.இவ்வாறே, புதிதாக இஸ்லாத்தையேற்ற சில நபித் தோழர்கள் காஃபிர்களுக்கு இருப்பது போல் எமக்கும் பறக்கத் பெற ஒரு மரமிருந்தால் நல்லது! என எண்ணியுள்ளனர்.
 
அவர்களது இந்தத் தவறான கேள்விக்குக் காஃபிர்கள் போன்று எம்மிடமும் ஏதாவது இருக்க வேண்டுமென்ற எண்ணம் தான் காரணமாக இருந்தது.இதே எண்ணம்தான் மீலாது-மவ்லீது, கத்தம்-கந்தூரி போன்ற விழாக்களையும், கப்று வழிபாடு, உருவ வழிபாடு, கொடி வழிபாடு போன்ற ஷிர்க்குகளையும் இந்தச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
 
மற்றுமொரு அறிவிப்பில் அபூஸைதுல் குத்ரீ(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
“உங்களுக்கு முன்பிருந்தவர்களைச் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள்! அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தாலும், (அதிலும்) நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீர்கள்!” என நபி(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (எமக்கு முன்பிருந்தவர்கள் என்றால்) “யூதர்களையும், நஸாராக் களையுமா குறிப்பிடுகின்றீர்கள்?” என நாம் கேட்ட போது, “(அவர்களல்லாமல்) வேறு யாரை?” என நபி(ரலி) அவர்கள் கேட்டார்கள். (புகாரி 7320, முஸ்லிம் 2669)
 
இந்த ஹதீஸ் தவறு செய்வதிலும், ஆதாரத்திற்கு முரணாக நடப்பதிலும் முஸ்லிம்கள் எவ்வளவு தீவிரமாக வழிகெட்ட யஹூதி-நஸ்றானிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே, யூத-கிறிஸ்தவ வழிமுறைகளை இஸ்லாமிய ரூபத்தில் முஸ்லிம் சமூகத்தில் நுழைப்பவர்கள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஸுன்னாவை ஆதாரத்தின் அடிப்படையில் பின்பற்றுவதில்தான் உறுதியாக இருக்க வேண்டும்.இதில் நாம் சற்றுக் கவனயீனமாக இருந்தாலும், ஷைத்தான் எம்மை வழிகேட்டில் தள்ளி விடுவான் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.
 
எனவே, குஃப்ஃபார்களின் வழிமுறைப் பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். நாம் அவர்களுக்கொப்பாக நடப்பதற்கும் முற்படக் கூடாது.
“யார் எக்கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ, அவர் அக்கூட்டத்தைச் சேர்ந்தவரே!” ..........(அஹ்மத்) என்ற ஹதீஸைக் கவனத்திற்கொண்டு செயற்படுவோமாக! 
 
 
அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நம் மீதும் நம் குடும்பத்தார்கள் மீதும் உண்டாவதாக... உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் நேர்வழியை என்றென்றும் காட்டி அதில் நாம் நிலைத்திருக்க அவனிடத்தில் மட்டுமே துஆ செய்து கொள்வோம்.