Wednesday, March 9, 2011

பகிரங்க எச்சரிக்கை


வலைப்பூக்களின் பின்னூட்டங்கள் வழியே அறிமுகமாகி, பின் தொடர்ந்து, இணையக் குழுக்களில் விவாதித்து, அரட்டைப் பெட்டிகளில் பேசிக் கொள்வதுதான் வலைப்பூ நட்பின் பரிமாணம். சமூக வலைத்தளங்களில் வியாபித்திருக்கும் போலித்தன்மைக்கு அஞ்சுவோர் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்

இங்கு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடிவதுடன் எழுதும் திறனை மெருகேற்றிக் கொள்ள முடிகிறது. நமக்கென 
ஒரு தளம் என்கிற உணர்வும், நம்மைப் பின்தொடரும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற பெருமிதமும்தான் வலைப் பதிவர்களை தொடர்ந்து எழுதச் செய்கின்றன.

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் சேவை வழங்குவோர் என அனைவருமே இதுபோன்ற அரட்டைப்பெட்டி வசதியை வழங்குகின்றனர். நட்பைத் தேடுவோர் முதலில் சங்கமிக்கும் இடம் சமூக வலைத்தளங்கள்தான். ஆனால் இந்த நட்பில் நம்பகத்தன்மை இருப்பதில்லை. எச்சரிக்கை உணர்வுடனேயே எல்லோரையும் அணுக வேண்டும். இவற்றில் பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகளில் பெரும்பகுதி எந்த நோக்கமும் இல்லாதவை. அவற்றிலும் உண்மையானவை மிகச் சொற்பமே. பெண்களையும், குழந்தைகளையும் பிடிப்பதற்காகவே பலர் வலைவிரித்திருப்பார்கள். தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களின் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்யவும் வழியுண்டு.
சமூக வலைத்தளம் என்பது பொதுவெளி. குழு விவாதமும் அதுபோலத்தான். பொது இடத்தில் எந்த அளவுக்கு நாகரிகமாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொள்வோமோ அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் இயங்க வேண்டும். ஆனால், இந்தத் தெளிவும் முதிர்ச்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவியும் ஆறாம் வகுப்பு மாணவனும் சமூக வலைத்தளங்களில் நட்பு கொள்கிறார்கள். அரசம்பட்டி அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள் குழு என்பதுபோல இவர்களுக்குள் குழுக்களும் உண்டு. குழந்தைகளின் இணைய நடவடிக்கையைக் கண்காணிப்பது குறித்து பெற்றோருக்கு இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படாத நிலையில், இந்தக் குழந்தைகள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் மணமகன் அல்லது மணமகளைக் கண்காணிக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. பெண்ணுக்கு நட்பு வட்டம் எப்படி இருக்கிறது, யாருடன் நெருக்கமாகப் பழகுகிறார் என்பதையெல்லாம் பிள்ளைவீட்டார் கண்காணிக்கிறார்கள். பெண்வீட்டாரும் இதைத்தான் செய்கிறார்கள். இந்தக் கண்காணிப்பால் திருமணம் நின்றுபோன விநோதங்கள்கூட உண்டு. எல்லாம் தமிழ்நாட்டில்தான்.
சமூக வலைத்தளங்களில் எல்லோராலும் நம்மைக் கண்காணிக்க முடியும் என்பதே அவற்றைப் பயன்படுத்தும் பலருக்குத் தெரியாது. இதுதான் மோசடிகள் நடப்பதற்கும், அந்தரங்கங்கள் வெளியாவதற்கும் முக்கிய காரணம். இணைய அரட்டையிலும் இந்த அளவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஜிமெயில் சேவையில் நமது அரட்டைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வரும் என்பதையும் பலர் அறிந்திருக்கவில்லை. அப்படிப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இருந்தாலும், அதைப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. அப்படியே தடுத்தாலும் வேறு வகையில் அதை ஆவணப்படுத்த முடியும்.

 பாதுகாப்பானது, ரகசியமானது என்பது போன்ற தோற்றம் இணைய அரட்டைக்கு இருக்கிறது. உண்மையில் அது முழுக்க முழுக்க பொய்யே. என்னதான் உங்களது மின்னஞ்சல் கணக்கை நீங்கள் கடவுச் சொல் போட்டுப் பூட்டியிருந்தாலும் கள்ளச்சாவிகள் போட்டு அதைத் திறந்து பார்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் தொழில்நுட்பத்தில் தேர்ந்த திருடர்கள். உங்கள் பாதுகாப்புக்காக வீட்டுச் சுற்றுச் சுவரை 8 அடிக்கு உயர்த்தினீர்கள் என்றால், தொழில்நுட்பத் திருடர்களால் 12 அடிக்கு ஏணி தயாரிக்க முடிகிறது. இதுதான் இன்றையத் தொழில்நுட்பத்தின் உண்மையான முகம்.
 இந்தத் தொழில்நுட்பம் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம். இணையத்தில் கிடைக்கும் பிணைப்பற்ற நட்பு எந்த நேரத்திலும் துரோகம் இழைக்கலாம். பிரபலமாக வேண்டும், நட்பு வட்டத்தை விரிவாக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை எழுதுவதும், குடும்ப புகைப்படத் தொகுப்புகளை வெளியிடுவதும் ஆபத்தை விளைவிக்கும். வலைப்பூக்களில் எழுதும்போதும் இதே எச்சரிக்கை 
உணர்வு அவசியம். 

தற்கால தொழில்நுட்பத்தையும் இணைய நட்பையும் நம்பி அரட்டைகளில் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. நமக்கு ஆதரவான தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் நமக்கு எதிராகவும் திரும்பக்கூடும். எச்சரிக்கையாக இயங்காவிட்டால் முடங்கிப் போகவேண்டியதுதான்.
 

Friday, March 4, 2011

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அவசர மடல்


முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவசர மாநிலச செயற்குழு சென்னை டி நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.
இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.
நேரம் – காலை 10 மணி
நாள்  – 6-3-11
------------------------------------------------------------------------------------------------

வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு த த ஜ சென்னையில் அவசர கூட்டத்தைக் கூட்டி,விவாதிக்க உள்ளது.இந்த நேரத்தில் அதன் தலைவர்,சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அரசியல் வெற்றிடத்தை தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை ம ம க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகள் மட்டுமே நிரப்பி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்காக தங்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
சில சூழ்நிலையின் பேரில்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நாம் நம் மார்க்க சகோதரர்களிடம் அழகிய ஒப்பந்தம் போடலாம் அல்லவா?
நம்மை அழிக்க என்னும் பா ஜ க போன்ற கட்சிகளுக்கு நாம் மறைமுகமாக உதவக்கூடாது.

நாம் தி மு க,அதிமுக ,காங்கிரஸ்,மற்றும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அவர்கள் நம் பிரச்னையை பேச மாட்டார்கள்.மாறாக நாம்தான்,நம் முஸ்லிம் வேட்பாளர்தான் வெற்றி பெற்றால் சட்டசபை சென்று பேசமுடியும்.நமக்கென குறைந்தது ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எனில் சட்ட சபையை நம் சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும்.

நம்மிடையே என்னதான் பிரச்சனைகள் என்றாலும்,தங்கள் இயக்கம் ஒரு குழு அமைத்து ம ம க,முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகளிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு,நம் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறது,அவற்றை களைய நாம் செய்ய வேண்டியது என்ன,நீங்கள் வெற்றி பெற்றால் இப்படி செய்யவேண்டும்,நமக்குள் எவ்வித சண்டை,சச்சரவு எதுவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம் போன்ற கோரிக்கைகள் வைத்து,ஒப்பந்தம் போட்டு,இந்த சமுதாயத்தின்,அல்லாஹ்வின் மார்க்கம் தழைத்தோங்கவும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உம்மத் இன்னும் வளம் பெறவும் சேர்ந்து களப்பணி ஆற்றலாம் அல்லவா?

தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் த த ஜவில் இருக்கிறார்கள்.அதன் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.சமுதாயம் ஒன்றுபட இனிய தருணம்.அல்லாஹ்விடம் கூலி வேண்டி - என்னைப்போன்ற லட்சக்கணக்கான மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.
தயவு செய்து,எல்லா முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடுபடுவோம்,நமக்கு எதிரான சதியை இன்ஷா அல்லாஹ் முறியடிப்போம்.
எனவே,தாங்கள் கூட்டும் இந்த அவசர கூட்டத்தில் நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.

Sunday, February 27, 2011

வாழ நினைத்தால் வாழலாம்


வளமான எதிர்காலத்துக்காக திட்டமிடாதவர்களே இல்லை. ஆனால் திட்டக் காலத்தில் எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்தவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

இலக்கை அடைவதற்கான செயல் திட்டம் தயாரித்தலும், இடையில் ஏற்படும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கலாம்.

ஒரு இலக்கை நிர்ணயித்த பின் அதை அடைவதற்கு தயாரிக்கும் செயல்திட்டம் மிகவும் முக்கியமானது. செயல்திட்டம் என்பது எதிர்காலத்தை தெளிவுபடுத்தும் வரைபடம் எனலாம். இலக்கை அடையும் வரை ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டிய நுட்பமான விஷயத்தையும் குறிப்பிடுவதே செயல்திட்டம்.

இதனால் செயல்திட்டம் எங்கு தொடங்குகின்றது, எங்கு முடிகின்றது, என்பதை கணிக்க முடியும். இலக்கை அடைய எத்தகைய திறன்களையும், அறிவையும் பெற வேண்டும் என்பதும் தெளிவாகும். செயல்திட்டத்தை உருவாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

உங்களது தேவை- திறமை:

உங்களது எதிர்கால திட்டம் என்பது உங்களின் ஆசையை அடிப்படையாகக் கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு உங்களிடமுள்ள திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். 
இசையில் ஆர்வம் இருந்தால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விஞ்ஞானியாக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விளையாட்டு வீரராக அல்லது பயிற்சியாளராக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? என்று இனங்கண்டு அதற்கேற்ப செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு:

ஒரு மாணவி உயிரியல் படிப்பை விரும்பினார். விலங்குகள் மேல் உள்ள விருப்பம் காரணமாக அந்த படிப்பை தேர்வு செய்தார். ஆனால் படிக்கும்போது பரிசோதனைக் கூடத்தில் விலங்கினங்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதைப் பார்த்தவுடன் அவரது மனதில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே வேறு பிரிவில் படிப்பைத் தொடர விரும்பினார்.

நீங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும், நீங்கள் படிக்கும் படிப்பு அல்லது செயல்பாட்டிற்கு முரண்பாடு ஏற்பட்டால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படும். ஆகவே நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு பாதிக்கப்படாத அளவில் உங்கள் செயல்திட்டம் அமைய வேண்டும்.

மாற்றத்தை கவனியுங்கள்:

வேலை உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. ஒரே தொழில்நுட்பம் அல்லது பொருள் வாடிக்கையாளரை கவருவதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகள், பயன்பாடுகள் அதிகரிக்கும்போது வேலைத்திறன்களிலும், திறமையை வெளிப்படுத்துவதிலும் உரிய பயிற்சி தேவைப்படுகின்றது.

நீண்ட கால இலக்கை நீங்கள் திட்டமிடும்போது இத்தகைய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

உதவுபவர்களின் பங்கு:

உங்களது செயல்திட்டத்தை நிறைவேற்ற பலரின் உதவி தேவைப்படலாம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பொருளாதார ரீதியாகவும், தொடர்ந்து ஊக்கப்படுத்துவதன் மூலம் மனோரீதியான உதவியாகவும் அமையும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களின் ஆதரவும் ஆக்கப்பூர்வமாக இலக்கை அடைய உதவும்.

துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை, பயிற்சி பெறுவதற்கு துறை சார்ந்த தொழில் கூடங்களின் ஒத்துழைப்பு அகியவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வங்கிக்கடன் பெற்று கல்வியை தொடர்ந்தால் வங்கியின் பங்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தேர்வு செய்யும்போது வெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பது இயலாது. அனுபவ அறிவும், துறை சார்ந்த தகவல்களையும் ஒருங்கிணைத்து புரிந்து கொண்டு வழிநடத்துபவர்களின் ஆலோசனை முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் ஆழமான அனுபவ அறிவுடையவர்களை இனங்கண்டு அவர்களின் ஆலோசனையை பெறுவதும் செயல்திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இடர்பாடுகள் இல்லாமல் இலக்கை அடைய முடியும்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள்:

உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி, பகுதிநேர பணிவாய்ப்புக்கள் போன்றவையும் இலக்கை அடைய உதவியாக இருக்கும். இவை அடைய வேண்டிய இலக்கு சார்ந்த அனுபவ அறிவைப் பெற்றுத்தரும்.

சில சமயங்களில் அனுபவ ரீதியாக உங்களுக்கு பிடிக்காத துறையை தேர்வு செய்திருப்பதாக உணர்ந்தால் மீண்டும் இலக்கை மாற்றி அமைத்துக் கொள்ள இத்தகைய பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் உதவும். நீங்களே உங்களது திறமையையும், ஆர்வத்தையும் அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும்கிடைக்கும்.

பிறருடன் தொழில் சூழலில் எவ்வாறு நட்புறவுடன் பழகுவது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு பணியாற்றும்போது கிடைக்கும் ஊக்கத் தொகையையும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பொருளாதார ரீதியாக திட்டமிடவும் உதவும்.

கால மேலாண்மை:

செயல்திட்டத்தில் நேர மேலா ண்மை மிக முக்கியமானது. கால மேலாண்மை என்பது நீங்கள் எவ்வாறு காலத்தை செலவிடுகின்றீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு வாரம் உங்களது செயல்களையும், அதற்கு நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் பயன்படும் வகையில் நேரத்தை செலவழிக்கின்றீர்கள், எப்போதெல்லாம் வீணாக பொழுது போக்குகிறீர்கள் என்று அறிந்து அதற்கேற்ப கால மேலாண்மையை செய்யலாம்.

யார் என்ன சொன்னாலும் அதற்காக நேரம் செலவிடக்கூடாது. அது தேவையற்றதாக நீங்கள் உணர்ந்தால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதற்காக தயங்க வேண்டியதில்லை. முக்கியமான, தேவையான விஷயங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள்.

ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால் உடனே செயலை தொடங்குங்கள். தள்ளிப்போட வேண்டாம். ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க ஒரு கால வரையறையை நிர்ணயித்துக் கொண்டு செய்து முடிக்கப் பழகுங்கள். இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள். அல்லாஹ் நாடினால் வெற்றி நிச்சயம்!

Wednesday, February 23, 2011

போட்டு உடைக்கிறார்

உண்மையை சொல்வது,எழுதுவது இது ஒரு முக்கிய விடயம்.சிலர் எழுதினாலும்,பேசினாலும் பொய் பொய் மற்றும் பொய் தான் மிச்சமாகும்.ஆனால் இந்த பிளாக் உண்மையை எடுத்து சொல்லும் ஒரு உன்னத விளக்கு.சத்தியம் சொல்லும் லட்சிய வரிகள்.

இவர் உண்மைகளை சொல்கிறார் என்பதை விட போட்டு உடைக்கிறார் என்பதே - என சொல்வதே சிறந்தது என் எண்ணுகிறேன்.

உலகின் எந்த வேதமும் - மதமும் சிந்திக்காதே,என்ன சொல்லப்படுகிறதோ - என்ன எழுதியுள்ளதோ அது படி செய் என இருக்கும்,ஆனால் குரான் மட்டுமே இறைவன் அருளிய இந்த வேதத்தை படி,சிந்தி,உண்மை உணர்,ஏற்றுக்கொள் என்கிறது.சிந்திக்காமல் இருந்துவிடாதே,அறிவு கெட்டவனை போல் ஆகி விடாதே என சொல்கிறது திருக்குர்ஆன்.

அந்த வேதம் என்ன சொல்கிறது,அந்த இஸ்லாம் என்ற மார்க்கம் என்ன சொல்கிறது.............

இவர் இப்படி உண்மையை போட்டு உடைக்கிறார்..............
படியுங்கள்

மலட்டுத்தன்மை


குழந்தைப் பேறு மருத்துவ அறிவியலில்மனைவிக்கு குழந்தைப் பேறு அளிப்பதில் கணவனின் விந்தணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புகை பிடித்தல்மதுப் பழக்கம்அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிமன உளைச்சல் தரும் வேலைகள்உடல் பருமன்போதைப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் மலட்டுத்தன்மை உண்டாகிறது. மேலும் எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்யும் ஆண்களுக்குஉயிர் அணுக்கள் மிகக் குறைவாக ஆற்றல் குறைவுடன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல்ரசாயன ஆலைகளில் பணிபுரிதல் உள்ளிட்ட தொழில்சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேலே குறிப்பிட்ட காரணிகளுள்புகைப் பழக்கம் காரணமாக குழந்தைப் பேறு இல்லாமை அதிகரித்து வருகிறது. குறிப்பாக புகைப் பழக்கம் காரணமாக பெரும்பாலானோருக்கு ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. குழந்தைப் பேறின்மை சிகிச்சை எடுக்க ஆரம்பித்தவுடன்புகைப் பழக்கத்தை கைவிடுவது அவசியம். இல்லையெனில் சிகிச்சை பலன் தராது.
திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில்எந்தவிதத் தயக்கமும் இன்றி மனைவியுடன் கணவன் பரிசோதனைக்கு வருவது அவசியம். பிறவிக் குறைபாடு இல்லாத நிலையில்மற்ற குறைகளை மருத்துவ ரீதியாக சரி செய்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் கவலைப்பட 
வேண்டாம்.

சிகரெட் உள்பட புகையிலை சார்ந்த பொருள்கள் பழக்கம் உள்ளோர் அதிலிருந்து மீள்வதற்கு சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் இலவச புகையிலை தடுப்பு ஆலோசனை மையம் (தொ.பே. எண்: 22351615) செயல்படுகிறது. இந்த மையம் ஞாயிற்றுக்கிழமை தவிர காலை மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை செயல்படும். பண்டிகைக்கான விடுமுறை நாள்களிலும் இந்த இலவச மையம் செயல்படும். சிகரெட் உள்பட புகையிலை சார்ந்த பொருள்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளோரும் இந்த மையத்தில் இலவசமாக ஆலோசனை பெற்று பலன் அடையலாம்.

Monday, February 21, 2011

நபிகளாரின் நன்மொழி..........

நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான்நம்பினால் துரோகம் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் - என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்.


புஹாரி ஹதீஸ் 33 :

Monday, February 14, 2011

.எச்சரிக்கை வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்


பெண்ணை நிர்வாண படம் பிடித்து, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் பயன்படுத்திய 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருத்தாசலம் அரசகுழியைச் சேர்ந்த மா.கம்யூ.பிரமுகர் ரட்சகர் மகன் கிளமென்ட் எஸ்லின் ராஜ்(25); தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து,மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லையெனில்ஆபாச படத்தை, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என பெண்ணின் பெற்றோரை மிரட்டினார். அவர்களுக்கு தெரியாமல் வீட்டில், 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்பொருத்தி,வீட்டில் நடைபெறும் 'சம்பாஷணைகளைமொபைல் போன் மூலம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர். எஸ்.பி.அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில்ரவுடிகள் ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார்கிளமென்ட் எஸ்லின் ராஜை கைது செய்து, 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்எனப்படும் ஒட்டு கேட்கும் கருவியை கைப்பற்றினர். அதில், 'ஜெர்மன் மிலிட்டரி டெக்னாலஜிமற்றும்'மேட் இன் சைனாஎன குறிப்பிட்டுள்ளது.விசாரணையில்அந்த கருவியை10 ஆயிரம் ரூபாய்க்கு ராமநாதபுரத்தில் வாங்கியது தெரிய வந்தது. தீப்பெட்டி அளவில் கைக்கு அடக்கமாக உள்ள அக்கருவியில் ஏதேனும் ஒரு 'சிம் கார்டுபொருத்திஎவருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டால்,உலகின் எந்த மூலையில் இருந்தும் அந்த எண்ணுக்கு, 'மொபைல் போன்'மூலம் 'டயல்செய்தால்கருவி இருக்கும் இடத்தில் 'ரிங் டோன்வராது.
மாறாக போன் செய்பவருக்கே ஒரு, 'ரிங் சவுண்டுமட்டும் கேட்கும். பின்னர்,கருவி உள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் சுற்றளவில் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை தெளிவாகக் கேட்க முடியும். 5 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நீடிக்கும். பேசினால் தான் சார்ஜ் டவுண் ஆகும்.தற்போது பரவலாக விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை கருவியால்ரகசியம் காக்க வேண்டிய ஒரு சில அலுவலகங்கள் மட்டுமின்றிவேறு விதமான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

Friday, February 4, 2011

சர்வதேச பாஸ்போர்ட்


இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல சர்வதேச பாஸ்போர்ட் அவசியமெனதமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: டில்லியில் கடந்த மாதம் நடந்த இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்தில்சர்வதேச பாஸ்போர்ட் வைத்துள்ள புனித பயணிகள் மட்டுமே 2011ல் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் போதுஒவ்வொருவரும் சர்வதேச பாஸ்போர்ட் அவசியம் வைத்திருக்க வேண்டும். தங்களிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால்ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் முன்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துஹஜ் அறிவிப்பு வெளியாகும் முன்புபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே குலுக்கல் சமயத்தில் சேர்க்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 3, 2011

GOT QUESTIONS?

GOT A QUESTION?

   ASK HIM                                              

HE WILL RESPOND TO YOU

VISIT  http://www.harunyahya.com/


சடங்குச் சுரண்டல்கள்

அலைகள் என்ன பேசக்கூடும்… 
கடல் கடந்த கணவனின் கவலை ஓரலை
… துணை பிரிந்த மனைவியின் துயரம் ஒரு பேரலை…
 பலரின் வாழ்வுக் கடலில் இந்த அலைகள் ஓய்வதே இல்லை…
 இளமைக் கற்பூரம்… அதில் எரிவதோ வறுமை நெருப்பு… 
முன்னதாய் முடிந்த சகோதரிகளின் திருமணம்…… 
பின்னர் நடந்த சடங்குச் சுரண்டல்கள்…
 இளமையின் விளிம்பில் இவனது திருமணம் எல்லாம் கடனைக் கடலாக்க...




விழிப்புணர்வு ஏற்றும் வரிகள்,உண்மை உணர்த்தும் வரலாறுகள்,மூடப்பழக்க மூர்க்கத்தனத்தை மழுங்கடிக்கும் வார்த்தைகள்,சுருக்கமாக SIMPLY SUPERB




http://www.samuthayaotrumai.com/

Sunday, January 23, 2011

உயிர் காக்க உதவுங்கள்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த சகோ.நிஹமதுல்லாஹ் [வயது 20] இருசிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்த முந்தைய கோரிக்கை அதிரை எக்ஸ்பிரஸில் 
16/04/2008 அன்று வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகளும் நல்லுள்ளம் படைத்தவர்களும் பொருளாலும் துஆ மூலமாகவும் உதவினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்!)

தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதிஉதவி கோரியுள்ளார். 
கீழ்காணும் அவரது மடலை வாசிப்பவர்கள் தாங்களும் தங்கள் நட்பு வட்டாரங்களிலும் இந்த  கோரிக்கையை எடுத்துச் சொல்லி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மீண்டும் கோருகிறோம்.

அதிரை மற்றும் ஏனைய வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் இந்த கோரிக்கையை பிரசுரித்து அதிகபட்ச உதவிகள் உரியநேரத்தில் சென்றடையுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது உதவிகளை மறக்காமல் கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

அல்லாஹ்வின் நல அருள் நம் அனைவர் மீது கிட்டட்டுமாக.ஆமீன்

-அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு மற்றும் வாசகர்கள்-

----------------------------------------
Assalamualikum

My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011.

As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed.


But Now His Blood  serum creatitine level is 20
Blood Urea is 164 . so doctor advised to immediately  start  the hemodayalasis process.
Now we do the hemodayalasis process

Also he need a dialysis process for every weekly for  two times.
per dialysis cost is min Rs.3000/-

insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs.
Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Thanking you
Best Regards
Najumudeen
---------------------------------------------
*மேற்கண்ட மடலை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு உடனடியாக அனுப்பித் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமின்.
நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்.
 நபிகள் நாயகம் 


http://adiraixpress.blogspot.com/

Sunday, January 9, 2011

பிறப்புரிமை

'PIRAPPURIMAI' Documentary Film

Directed by - Aloor Shanavas
Produced by - Media Steps
Duration - 30 min


http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html


ஊடகங்களில் 'பிறப்புரிமை'!

Thursday, January 6, 2011

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் இங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
இந்த செய்தியை படிப்பதோடு இல்லாமல், தங்கள் வீடுகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டுகோள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருபுரிவானாக.

இக்கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு பல நாட்களாக தன்னலம்பாராமல் உழைத்துவரும்மாநாட்டு குழு சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.


-- அதிரைநிருபர் குழு

-- முஜிப்.காம்

-- அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டு குழு

Thursday, December 30, 2010

"இது"வெங்காயம்


படம்
முஹம்மத் யூசுப் பென்சில்வேனியா 

Saturday, December 25, 2010

இயேசு அழைக்கிறார்

இன்று கிருத்துவர்களால் ஆரவாரமாக கொண்டாடப்படும் கிறுஸ்துமஸ் நாள் என்பது உண்மையில் ஏசு கிறுஸ்து பிறந்த நாள் தானா என்பதை பைபிள் துணையோடும் வரலாற்று பிண்ணனிகளோடும் அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு கிறுஸ்துவனுக்கும் உள்ளது.

படிச்சு பாருங்க