Saturday, July 7, 2012

இவர்கள்தான் நபிகள் நாயகம் ஸல்


மனிதனின் முதல் தேவை உணவு தான்உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான்.முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆட்சித் தலைவராகவும்ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகையஉணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.
 
'மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கண்களால் கூட கண்டதில்லைசராசரி மனிதன் உண்ணுகின்றஉணவைக் கூட அவர்கள் உண்டதில்லைஎன்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

'
எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் மனைவிஆயிஷா (ரலிகூறினார். 'என் சிறிய தாயாரேஅப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?' என்று நான் கேட்டேன்அதற்கு ஆயிஷா (ரலி) 'பேரீச்சம் பழமும்தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தனசில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலைஅன்பளிப்பாகத் தருவார்கள்அதை அருந்துவோம்என விடையளித்தார். அறிவிப்பவர் : உர்வா நூல் : புகாரி 2567, 6459

'
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று நபிகள் நாயகத்தின்பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலிஇடம் கேட்டேன்அதற்கு அவர் 'நபிகள் நாயகம் (ஸல்அவர்களை இறைவன் தனதுதூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை லிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லைஎன்றார். 'நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?' என்று கேட்டேன்அதற்கவர் 'நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லைஎன்றார். 'தோல் நீக்கப்படாத கோதுமைமாவைச் லிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?' என்று நான் கேட்டேன்அதற்கவர் 'தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம்.பின்னர் வாயால் அதை ஊதுவோம்உமிகள் பறந்து விடும்எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்என்று விடையளித்தார்.அறிவிப்பவர் : அபூ ஹாஸிம் நூல் : புகாரி 5413
 
'நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும்வயிறார உண்டதில்லைஎன நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 5374
 
'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்துமூன்று நாட்கள் வயிறார உண்டதில்லைஎன நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 5416, 6454
'ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் சாப்பிடுவதற்காகஎடுத்து வைப்போம்அதை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சாப்பிடுவார்கள்என்று நபிகள் நாயகத்தின்மனைவி ஆயிஷா (ரலிகூறினார். 'இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டதுஅவர் சிரித்து விட்டு 'குழம்புடன்கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையேஎனவிளக்கமளித்தார். நூல் : புகாரி 5423
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலிஇடம் நாங்கள் சென்றோம்ரொட்டி தயாரிப்பவர்ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார்எங்களை நோக்கி 'சாப்பிடுங்கள்என்று அனஸ் (ரலிகூறி விட்டு 'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லைதமது கண்களால் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லைஎனக் கூறினார்.அறிவிப்பவர் : கதாதா நூல் : புகாரி 5385, 5421, 6457.
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) 'எனது வீட்டிருந்து கோதுமை ரொட்டியையும்வாசனை கெட்டகொழுப்பையும் கொண்டு சென்றேன்அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோஅல்லது வேறு ஏதேனும்தானியமோ இருந்ததில்லைஎன்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலிகூறுகிறார். நூல் : புகாரி 2069, 2508
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன்உடனே என் தாயார் உம்முசுலைம் (ரலிஇடம் வந்து இதைக் கூறினேன்அதற்கவர் 'என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும்சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன.நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும்யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால்அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்
(
ரலிஅறிவிக்கிறார்.நூல் : முஸ்லிம் 3802
 
நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலிஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார்அவர்கள்முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்ததுஅவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர். 'நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்என அபூ ஹுரைரா (ரலிமறுத்துவிட்டார். நூல் : புகாரி 5414
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது குடும்பத்தினரிடம் 'குழம்பு ஏதும் உள்ளதா?' எனக் கேட்டனர். 'வினிகரைத் தவிர வேறு ஏதும்எங்களிடம் இல்லைஎன்று குடும்பத்தினர் கூறினார்கள்அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். 'வினிகர்சிறந்த குழம்பாக இருக்கிறதேஎன இரு முறை கூறினார்கள். நூல் : முஸ்லிம் 3824
நான் எனது வீட்டின் நிழலில் நின்று கொண்டிருந்தேன்அப்போது நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன். 'அருகே வாஎன்று அவர்கள் அழைத்ததும்அருகில் சென்றேன்என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள்தமது வீட்டுக்குச் சென்றவுடன் 'காலை உணவு ஏதும் இருக்கிறதா?' என்றுகேட்டார்கள்வீட்டிலுள்ளவர்கள் 'இருக்கிறதுஎன்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள். 'குழம்பு ஏதும் உள்ளதா?'என்று நபிகள் நாயகம் (ஸல்கேட்டார்கள். 'சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லைஎன்று குடும்பத்தினர் கூறினார்கள்நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் 'அதைக் கொண்டு வாருங்கள்என்றார்கள்வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர்எனக்கும்அவர்களுக்கும் தலாஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள்மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டுஇன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலிஅறிவிக்கிறார். நூல் : முஸ்லிம் 3826
 
'நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கானஉணவைத் தயார் செய்வீராக!' என்று அபூ ஷுஐப் (ரலிதமது ஊழியரிடம் கூறினார்பின்னர் நபிகள் நாயகம் (ஸல்அவர்களை விருந்துக்குஅழைத்தார்அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாதஇன்னொருவரும் சேர்ந்து கொண்டார். 'இவர் எங்களைப் பின்தொடர்ந்துவந்து விட்டார்இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராகஇல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!' எனநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள்அப்போது அபூ ஷுஐப் (ரலி) 'இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்என்றார்.நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் வெளியே புறப்பட்டனர்அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலிஆகியோரைக் கண்டனர்இந்தநேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்னஎன்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கேட்டனர்அவ்விருவரும்பசிஎன்றனர்அதற்கு நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 'நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன்'என்றார்கள்... ஹதீஸ் சுருக்கம்.நூல் : முஸ்லிம் 3799
இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும். 
ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள்காய்ந்து போனரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.
செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாதவாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக்கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள்அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததுஅவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள்என்ற நிலையும் இருந்ததுஅவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.
அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?

குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?

காய்ந்த ரொட்டியும்வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டுபச்சைத் தண்ணீரை மட்டும்குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?

அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?

ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையைஉலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?

முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும்நிலையை உலகில் எந்த மன்னரேனும்எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?

காய்ந்த ரொட்டியையும்தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கிபசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?

பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைஎளிமையாக இருந்துள்ளது எப்படி?
இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்திபொருள் திரட்டவில்லைசெல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.
இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக்கூற முடியும்எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரேவேறு வகையானசுகபோகங்களை அனுபவிக்கின்றனரேஅது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுகபோகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

உயிரின் வேர்கள் -7 உமர் (ரலி ) அவர்கள்

Thursday, July 5, 2012

உயிரின் வேர்கள் -6


கண்கலங்கிய பெருமானார்
சஹாபா கண்மணிகளிடம் 
அறிவுரை வழங்கலானார்கள் ...
உற்ற நண்பர்கள்
நபியவர்களின்
 தோழர்கள் 
யாரசூலே!  அல்லாஹ்வின் அழைப்பு 
வெகு அருகில் உள்ளதாலோ 
எங்களுக்கு
நல்லுபதேசம் 
எச்சரிக்கையுடன் தருகிறீர்களோ ..
பகர்ந்தனர் சஹாபா பெருமக்கள் 


நன்றாக கேளுங்கள் 
என் அருமை தோழர்களே ..!
கருப்பரேயானாலும் 
தலைவராக வந்தால்
அதை ஏற்று நடந்திடல் 
வேண்டும் 
இறையச்சம் பேண வேண்டும்


காத்தமுன் நபி நாதர் (ஸல் )
சொல்லதனை
கடமை வீர சஹாபாக்கள் 
கண்ணியமாய் ஏற்றனரே.


சஹாபா பெருமக்கள் .
சிறப்பு தன்னை 
பெருமானார் சொன்னதை
நாம் விளங்கிடுவோம் 
சஹாபா பெருமக்கள் 
ஒரு கையளவு தர்மங்கள்
 மலையளவு மதிப்பாகும் .

சஹாபா பெருமக்கள்
 மேன்மக்கள் மேன்மக்களே ..!
நாம் செய்யும் 
மலையவு தர்மங்கள்
சஹாபாக்களின்
கையளவு தர்மம் போல் 
மலையளவு தர்மம் செய்து
சஹாபாவின் கையளவு ஆகிடுவோம் ..!
அபூபக்கர் சித்தீக் (ரலி )அவர்கள்
வரலாறு 
பெரும் ஏடு  
இச்சிறு கவியில்
சிந்தைக்கு ஏற்றி விட 
என்னால் முடியாது
விவரங்கள் பல அறிய 
நூலதனை படித்திடு வீர்
சிறு குறிப்பு தந்து
 நானும் உமர் (ரலி)வாழ்வை நாம்
பார்த்திடுவோம்.
அபூபக்கர் சித்தீக் (ரலி )பற்றி 
சிறு குறிப்பு தந்து 
நானும் அடுத்து அத்யாயம் 
செல்கின்றேன்

அபூபக்கர் சித்தீக் (ரலி )சிறப்பு பற்றி 
சிறு நிகழ்வு
விளக்கம் கேட்டு ஒரு பெண் .
நபிகளிடம் சென்றார் 

தங்கள் சமூகத்தில்
தாங்கள் இல்லையென்றால் 
யாரிடம் விளக்கம்
பெறுவது என்று அவள் கேட்டதுமே 
அபூபக்கரிடம் (ரலி )சென்று கேள் 
என்றுரைத்தார்கள் நன்னபி நாயகம் (ஸல் )
வள்ளல் நபி நாயகத்தின் (ஸல்) ..
உற்றதொரு தோழராக
நல்லதொரு சீடராக
சித்தீக் எனும் தோழரவர்
 நாளும் அவர் வாழ்ந்து வந்தார் ...
காலங்கள் செல்ல செல்ல
கருணை நபி (ஸல்) நாயகத்தின் ..
வபாத்து காலம் நெருங்கியது-நிழலாக இருந்த 
 நண்பர் வெளியில் சென்றிருக்க ..
வள்ளல் நபி நாயகமும் ..
உலகை விட்டு பிரிந்தார்கள் 
உலுக்கும் அந்த செய்தியுமே ...
உற்ற தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி )அவர்களிடம்
சென்றதுமே ..சட்டென புரவியேறி ...
பாலை மணல் புழுதி பறக்க ..
விரைந்திட்டார்  இறை தூதர் வீடு நோக்கி ..
வள்ளல் நபி நாயகத்தின் ..ஜனாஸா ..
போர்வையதில் போர்த்திருக்க ..
பார்த்ததுமே பதை பதைதிட்டார் ...
பயகம்பர் உடல் நோக்கி விரைந்திட்டார்
அருமை நாயகதினையே கடைசியாக
பார்த்திடவே முகம் திறந்து முகம் பார்த்து
நெத்தியில் முத்தமிட்டார் ...
வள்ளல் நபி முகத்தினிலே ...
கஸ்தூரி வாசம் வீசுவது நிற்கவில்லை ..
ஜனாஸா ..குணமில்லா ..மனம் கமிழுகிறது
என மனமுருகி நவின்றார்கள் ...
தூதர் நபி பிரிந்த சோகம் ஒரு புறம் ..
தூக்கி நிறுத்தும் பொறுப்பு மறுபுறம் ..
இஸ்லாத்தின் கொள்கை தன்னை
தொடர்ந்து நாளும் போதிக்கவே ..
நபி விட்டுசென்ற பணிதன்னை
கடைசி உம்மத் வரை இருப்பதினால்
கடும் சுமையாய் நினைக்க வில்லை ..
நபியவர்கள் கண்ணுக்கு பின் ..
முதலாம் கலிபாவாக ...
அபூபக்கர் சித்தீக் (ரலி )பதவியதை ஏற்று கொண்டார்
மென்மையான அபூபக்கர் சித்தீக் (ரலி )
ஆட்சி அருமையாய் அமைந்தது 
ஜகாத் விசயத்தில் 
செல்வந்தர்கள் மறுத்ததற்கு
கடினமான ஆணையிட்டு 
மக்கள் குறை தீர்த்து வைத்தார்

இரு வருடத்தில்
 அபூபக்கர் சித்தீக் (ரலி)
இறைவனடி சேர்ந்தார்கள் ..

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன் )
அடுத்து .....உமர் (ரலி ) உயிரின் வேர்கள் தொடரும் 

அதிரை சித்திக் 

உயிரின் வேர்கள் -5


இறைத்தூதர் வாக்குதான்.....
வாழ்க்கையின் லட்சியம் 
என
வாழ்ந்துவந்த
 பேறுபெற்ற பெருமகனார்
அபூபக்கர் சித்தீக் (ரலி )எனும் தோழர் ..

வெண்ணையில் 
மயிலிறகாய் ..
மென்மையாய் பேசும் தோழர் .,

வள்ளல் நபி நாதர்  (ஸல்) அவர்கட்கு 
ஒன்று என்றால் 
விரைதிடுவார் ..
கடும் பாறையாக ..
மாறிடுவார் 

போர் ஒன்றில் 
நபி பெருமானார் (ஸல்) அவர்கட்கு 
காயம் ஒன்று ஏற்படவே ...
தாய் சிங்கம் சீறுவது போல் ..
சீறி பாய துவங்கினார்
சீர்மிகு அபூபக்கர்சித்தீக் (ரலி) எனும் தோழர் ,,

போர்களத்தில் பாய்ந்து
 எதிரிகளை ..
இடத்தை விட்டு 
விரட்டி அடித்து
வீணர்களை ஓட செய்தார்

மீண்டும் வந்தார்
நபி பெருமானார் வசம் .

வள்ளல் நபி (ஸல் )நாயகத்தின்
தொடரும் நிழலாக 
வாழ்ந்து வந்தார் .
அபூபக்கர் சித்தீக் (ரலி )எனும் தோழர்

காலங்கள்சென்றன 


ஒரு நாள்
நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள்
கண்கள் கலங்க 
நா தழுதழுக்க ..
அன்பு தோழர்களை பார்த்து
அறிவுரை சொன்னார்கள் 

அதிரை சித்திக் 



இன்னும் தொடரும் 
இன்ஷா அல்லாஹ் 

Tuesday, July 3, 2012

உயிரின் வேர்கள் -4


இறையின் நேசத்திற்கு 
பிறகு ..
இவர் நேசமே எனக்குண்டு 
என்று
அபூபக்கர் (ரலி )அவர்கள் பக்கம்
நம் நபி (ஸல் )பகர்ந்தார்கள் 

இஸ்லாத்தின் பிரச்சாரம் ...
துவங்கிய 
காலமதில்..
இன்னல்கள் பல ஏற்று 
ஏந்தல் நபி
வழி சென்றார் ..
நன்மை செய்வதில்
 நபி தோழர்களுக்குள் 
செல்வத்தை இழந்தாலும்
 நன்மை பெற
முயலும் நபி தோழர்கள் 
எல்லா சஹாபிகளும்
வியக்கும் வண்ணம் 
நன்மைகள் பல செய்து
முதன்மையாய்
 வந்து நிற்பார் ..
அபூபக்கர் ரலி எனும் தோழர் ...

மக்கத்து காபிர்கள் ...
நபிகளாரின் உயிருக்கு ...
உலை வைக்க 
நினைத்ததுமே ...
மதீனா மண்ணிற்கு ஹிஜ்ரத் எனும்
இடம் பெயர்வு நிகழ்ந்த பொழுது
நபிகளாரின் நிழலாக ..
உடன் சென்றார் 
உத்தம நபி தோழரவர்

கவுர் எனும் குகை தங்கி ..
காத்தமுநபியுடன் சென்றவரும்
அபூபக்கர் (ரலி ) அவர்களே


குறைவில்லா செல்வமதை பெற்றிருந்த
பெருமகனார் 
பூமான் நபி (ஸல் ) அவர்களோடு
மதினாவிற்கு சென்ற பொழுது ...
ஈமான் எனும் செல்வத்தை மட்டுமே
உள்ளத்தில் எடுத்து சென்றார் ..

நபி (ஸல் )சொன்ன வார்த்தைக்கு
ஆம் என்ற பதில் மட்டும் ..
அபூபக்கர் (ரலி ) வாழ்வு தன்னில்
வந்ததுதான் சரித்திரம் ..

உயிரையும் உடமையையும்
காத்திடவே நாம் நினைப்போம் ..
உயிரையும் உடமையையும் ..
அல்லாஹ்வின் தூதருக்காக 
உதறி செல்ல ..
நினைத்த தோழர்கள் 
அவர்களே நம் 
உயிரின் வேர்கள் ..

(இன்ஷா அல்லாஹ் தியாகங்கள் தொடரும் )

அதிரை சித்திக் 

Sunday, July 1, 2012

உயிரின் வேர்கள் ....3 அபூபக்கர் சித்தீக் (ரலி)


அபூபக்கர் சித்தீக் (ரலி)

அறியாமை காலத்தில் ....
அல்லாஹ்வின் தூது தன்னை ..
அறிவித்த நாளன்றே ...
நன் நபி (ஸல் )நாதருக்கு
நட்பு கரம் நீட்டியவர் தான்
நல்லார் அபூபக்கர் சித்தீக் (ரலி)அவர்கள்
நபி தூதை பறை சாட்டும்
நாட்களிலெல்லாம் நபி(ஸல்)பட்ட
 கஷ்டங்கள்
சொல்லென்னா துயரங்கள் ..
எழுத்திலும் அடங்காது
ஏட்டிலும் அடங்காது ...

ஒரு நாள் நபிகளாரின்
 நபித்துவத்தை
ஒப்பில்லா 
இஸ்லாத்தின் கொள்கைகளை
அபூபக்கர் (ரலி ) அவர்கள்
மக்கத்து மக்களிடம்
 இஸ்லாத்தின்
மகத்துவத்தை மாண்புடனே ..
சபை தன்னில் எடுத்து வைத்தார் ..
சினம் கொண்ட மக்கவினர் ..
சிறு நரி கூட்டமாக 
சித்தீக் (ரலி )அவர்களை
அடித்தனர்,அதனால் 
துடித்தனர் -
அடி தாங்கா
அபூபக்கர் (ரலி)நிலை குலைந்து
மயக்கமுற்று தரை சாய்ந்தார் ..
குணத்திலோ  பெரியவராம்
 செல்வததில் சிறந்தவராம்
அபூபக்கர் ரலி எனும் தோழர் ...
கொள்கைகள் வேறென்றாலும் 
கோத்திரத்தில்
ஒன்றாகக்கூடி வந்த மக்கள்
தன குல செல்வரவர் மற்றோர்கள் தாக்குவதா
தன குல பெருமை போய் விடும் என்பதாலே
கோத்திரத்தார் ஓடிவந்து ......
அபூபக்கர் (ரலி) அவரை அள்ளிச்சென்று
மருந்திட்டார் அவர் கூட்டம் 
மயக்கமது தெளிந்ததுமே
என் தோழர் எங்கே என்றார் ...
நபி நாதர் நலம் தானே ...
நலமதனை அறிந்த பின்னர் ,
நான் குடிப்பேன் மிடறு நீரும் ..
அபூபக்கர் ரலி கோத்திரத்தார் பதறி சென்று
 நபிகளாரின்
நலமதனை தேடிசென்று 
அறிந்து வந்து ..
அபூபக்கர் (ரலி ) அவர்களிடம் சொன்னதுமே ..
நீரருந்தி புத்துயிர் பெற்றார் அபூபக்கர் (ரலி ) அவர்கள்

இவரைப் போல் 
இந்தப் பாருலகம் 
கண்டதுண்டா?
இல்லை 
கேட்டதுண்டா?

எங்கள் உயிரே போனாலும்
எங்கள் உடைமையே இழந்தாலும்
இழப்போமே - ஆனால் 
எங்கள் உயிரினும் மேலான 
அண்ணல் நபிகளின் 
மேலே ஒரு தூசி பட சகியோம்


இதுதான் அந்த 
உத்தமர்களின் 
மொத்த வரலாறு........

அதிலும் தலையானவர் 
நம் அபூபக்கர் ரலி எனும்
முமீன்களின் முதல் தலைவர்.


(இன்ஷா அல்லாஹ் இன்னும் வேர் விடும் ......)

அதிரை சித்திக் 
 

Saturday, June 30, 2012

உயிரின் வேர்கள் -2


அறியாமையை போக்கி .....
நன் நெறியை நோக்கி ...
இஸ்லாத்தின் வெற்றி ..
வள்ளல் நபி முகம்மது (ஸல் ) அவர்கள் ..
மறைவு செய்தி கேட்ட உமர் ரலி  
வாள் எடுத்தார்.
மறைந்தார் என சொன்னவனை 
கொய்திடுவேன் என
சிம்மமென கர்ஜித்தார் ,,
சினம் வேண்டாம் உமர் ரலியே 
சினம் ஏன் என உணரு ...
சினத்துக்கும்
சிந்தனைக்கும் 
அறிவான இஸ்லாத்தில்
அழகான இடமுண்டு 
என 
சித்தீக் (ரலி ) குளிர செய்தார்
ஒவ்வொரு ஆன்மாவும் ...
மரணத்தை ருசித்தே ஆக வேண்டும் 
என்று
குர் ஆனில் கூறப்பட்டதை 
நாம் நன்கறிவோம் ..
வள்ளல் நபி வாக்குப்படி 
நாம் நடப்போம் 
வாரும் மென்றார் ..

சினம் தணித்தார் 
உமர் ரலியும் 
மூத்தோர் சொல் கேட்பதுவும்
 அறிவார்ந்த நற்பண்பு
வீரத்தின் விளைநிலமாம் உமர் (ரலி ) அவர்கள்
விவேகத்தின் 
உரைவிடமும்தான்
முகம்மது (ஸல் ) அவர்கள் 
உற்ற தோழர்களின்
உறுதுணை நன்குணர்ந்து
தான் செய்த பணிதம்மை
தோழர்கள் தொடவார்கள் என 
தனக்கு இறை அழைப்பை
என்றோ அவர் சொல்லிருந்தார் ,
தூதர் சொன்ன வாக்கு தன்னை 
அற்புதமாய்
செய்திடவே 
வள்ளல் நபி ஆசானிடம்
செம்மையாக கற்றிருந்த சஹாபாக்கள் 
நபி
விட்டு சென்ற பணிதம்மை செய்திடவே 
அற்புதமாய்
பயிற்சி தன்னை வள்ளல் நபி (ஸல் ) வாழ்நாளில்
கொடுத்திருந்தார் ..
தான் விட்ட பணிதன்னை 
தடையில்லாமல்
சென்றிடவே செம்மையாக வகுத்திருந்தார்
செம்மல் நபி (ஸல் ) நாதருமே
வெற்றிடமாய் இருந்ததில்லை ..வள்ளல் நபி (ஸல்) சேவையுமே
வகை சூடி வாழ்ந்த வேந்தர்
ஆனாலும்,
வேந்தராக சொகுசு காணவில்லை
அவ்வழியே நபி தோழர்களும் நடந்து வந்த சரித்திரமே
உயிரின் வேர்கள் 
மாந்தரே கேளீரோ!

விண்ணகம் அழைத்தான் 
இறைவன்
சென்று வந்தேன்,
தொழுகை கொண்டு வந்தேன்
அங்கு நபி ஆதம் அலை முதற்கொண்டு
பல நபிமார்கள் கண்டு வந்தேன்,
இன்னும் சொர்க்கம்,நரகம் 
நிலவும் காட்சிகளை 
பார்த்து வந்தேன்
என்றுரைத்தார்கள் அண்ணல்
மாற்றாரோ மறுதலிக்க
"விண்ணகம் சென்றேன் என 
அண்ணலா சொன்னார்கள்
அப்படியென்றால் "ஆம்"உண்மைதான்
என அடித்து சொன்னார்கள்
அபூபக்கர் ரலியுமே.

சத்தியம் சொன்ன 
உத்தமர் அவரின் 
பெயரின் பின்னே 
சித்திக் எனும்
செல்லப் பெயரும் 
சேர்ந்து கொண்டது...
அந்த உத்தமரின் 
சரிதம் கேளீரோ
மாந்தரே-வாருங்கள் 


தொடரும் இன்ஷா அல்லாஹ் 

அதிரை சித்திக்  

Friday, June 29, 2012

உயிரின் வேர்கள்..........உன்னத சஹாபாக்களின் உளமார்ந்த வரலாறு,கவிதை வடிவில்

உயிரின் வேர்கள் ....!
இஸ்லாம் எனும் விருட்சம் ..
வளர்ந்த விதம் ,பெரும் உழைப்பு ..,
பாலையில் பசுமைக்கு போராடி ..
வென்ற வரலாறு 

உயிரின் வேர்கள் ..
******
விதை போட்டு வளர்க்க ..
நல்ல நிலம் வேண்டும் 

நீர் வேண்டும் ..
தோண்டி பார்க்கும் நிலத்தில் ..
பா
றை யில்லா குணம் வேண்டும் ..

பாறையிலும் பாலையிலும் ..,
பசுமை புரட்சி செய்த வரலாறு
உயிரின் வேர்கள் ..,
******************
பல தெய்வ கொள்கைகள் ..

பெண்ணுக்கு நிந்தனை
சிசு கொலை ,

குல பெருமை பேசி - பழிவாங்கும்
மடந்தை நிறைந்த காலத்தில்
மனிதம் தழைக்க 

உழைத்த வரலாறு
உயிரின் வேர்கள் .,
*******************
இறைவன் எனக்களித்தான் 

இறைதூது எனும்பதவி ...
என்றுரைத்தார் எம்நபி (ஸல்)...

உண்மையே சொன்னீர்கள்
என நவின்ற நற் தோழர் அபூபக்கர் (ரலி )போன்றோரின்
வரலாறே உயிரின் வேர்கள் ..
****************************
செல்வத்தை துறந்து ..,
உத்தமராம் நபி நாதர் (ஸல் )வழிவந்த
வடித்த செந்நீர் ஓட்டம்தான்
உயிரின் வேர்கள்
************************
சிறு நிலத்தில் தான் நினைக்கும்
செடி கொடிகள் வளர்க்கதான் ...
விவசாயி முயற்சிப்பான் 

கடும் மழையும்
கொடும் வெயிலும் 

தாக்காமல் போராடும் விவசாயி

செடிகொடிகள் வாடினால் 

அவன் வாடி போவான் .
இந்நிலத்தில் பயிர் செய்து 

நமகேதும் பலனில்லை
இடம்பெயர்ந்து நாடோடியாய்

 நல்நிலம் தேடிடுவான் ..
புயல் 
மழை  என்றாலும் ..

கடு கோடை என்றாலும் ..
பயிர் தன்னை உயிராகிய வரலாறு ..
உயிரின் வேர்கள்
*********************
வினோதங்கள் யாதென்றால் ..
விவசாயி தியாகத்தில் விளைபயிரும்
பங்கெடுத்த வரலாறுதான் ..
உயிரின் வேர்கள் ..
*********************
வன் காபிர்  வதைத்த போதெல்லாம்...
வாடாமல் வல்ல இறை பெயர்சொல்லி
உயிர்தாங்கி ..

இஸ்லாத்திற்கு உயிர் கொடுத்த வரலாறு
உயிரின் வேர்கள் ..  
*****************
 உணவளிக்காத போதும் ...
உறவுகளை 
முறித்துக் கொண்ட போதும்

உயிருக்கு உலை வைத்த போதும் ..
கொள்கை குணம் மாறாமல் -
உண்மைநபி (ஸல் )நாதர்
வழிவந்த நபி தோழர் சஹாபாக்களின் வரலாறே
உயிரின் வேர்கள் ...,



அதிரை சித்திக் 




Thursday, June 28, 2012

சங்கையுள்ள ரமலான் - கவிதை


கள்ள மனம் இல்லா ...!
வெள்ளை மனம் உள்ள ..
நல்லவர்கள் போற்றும் ..
உன்னதமானதொரு சங்கையுள்ள மாதம் ..
*************
பஞ்சமில்லா ஊரில் ...
பசித்திருக்கும் மாதம் ..
பசிஎனும் கொடுமை
பணக்காரன் அறிய
வல்ல இறை வகுத்தளித்த மாதம்
*******************
வாதங்கள் செய்தால் ..
வைத்திருக்கேன் நோன்பு என்று
தவிர்க்க சொன்ன நபி (ஸல் )போற்றும் மாதம்
பேதங்கள் பேசாது திரு மறை வேதம் ஓதும் மாதம்
*******************
ஒன்றுக்கு பத்தென்று
பல மடங்கு நன்மைகள்
குவிக்க வாய்ப்பு தரும் நல்லதொரு மாதம்
பேரொளியாம் அல்லாஹ்வின்
திருமறை நமக்கு வந்திறங்கிய நல்லதொரு மாதம்
*******************
ஆயிரம் மாதங்களைவிட ..
சிறந்த இரவாம் லைலதுல் கதிரிரவை
தாங்கி வரும் தங்கமென மிளிரும் மாதம்
*******************
முழு நாளும் உழைத்தாலும்
ஒரு நூறை சேமிக்க முடியாமல்
தள்ளாடும் முமினான ஏழைக்கு
சில நூறை கொடுத்து சிறப்பிக்கும்
நல்ல மாதம் ....
*********************
சில்லறையை எண்ணிய கைகள்
கரன்சிகளை காணும் ஏழைக்கு
கண்ணியம் தரும் மாதம் ..
******************
ஜக்காத் எனும் நான்காம் கடமையை
நன்றே தெரிந்த நம்மவர் ...
நம்மையை பத்தாய் பெருக்கி பெற்றிட
நல தருமம் செய்ய தூண்டிடும் நர்மாதம்
**********
ஏழையின் சிரிப்பு ..
பணக்காரனின் பசி வாட்டம் ..
சிறுவர்கள் நோன்பிருந்து ..ஆசையாய்
பண்டங்கள் பலவைத்து நோன்பு திறந்து மகிழும்
மங்கள நிகழ்வு மகிமையான மாதம் ..
*******************
ரமளானின் வருகைக்கு ..
ஷபானிலே வரவேற்க
காத்திருந்த நபி (ஸல் )அவர்கள்அன்பு பெற்ற மாதம்
*****************
பள்ளிகளில் அமல்
பளிச்சென தெரியும் ..
இரவில் தராவிஹ் தொழுகை
பகலில் பசித்திருந்து தவம்
ஒரு வருட தவ உணர்வு ஒரு மாதத்தில்
மகிழ்வுகளை அள்ளி தரும் புண்ணிய மாதம்
*****************
மாதம் அது மணித்துளியாய் கரைந்து போக
பெருநாள்;அன்று புத்தாடை உடுத்தி
குதூகலமாய் கொண்டாடி மகிழ்ந்து
இன்பமாய் கொண்டாடினாலும்
மறுநாள் ரமலான் பிரிந்த சோகம்
நம்மை தொற்றிக்கொள்ளும்
மறு பிறை காண காத்திருக்க
*************

மறு பிறை காண
வான் நோக்கும் நம் கூட்டம்
வானே புன்னகைக்கும்
வளைந்த ஒளிக்கீற்றாய்
அதுதான் முதல் பிறை ..
************
ரமலான் வந்ததும் மறு குதூகலம்
ஏழையின் சிரிப்புடன் ரமளானின் துவக்கம் .....
தொடரும் இன்பங்கள் ..கருகும் துன்பங்கள்
து ஆக்கள் ,கபூலாகும் தருணம்
தயாராகுங்கள் ..பாவம் போக்கி நன்மை சேர்ப்போம் ..!

அதிரை சித்திக்