Thursday, June 21, 2012

இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான்இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காபிர் என்பதற்கு கிறுக்கன்பைத்தியக்காரன்முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும்.அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர்ஏற்காதவர் என்பது தான்இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்)என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்)எனக் கூறுகிறதுஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது.ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும்இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள்இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறதுமுஷ்ரீக் என்றால் பல கடவுள்களை நம்புபவர்கள் என்பது பொருள்பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறதுபல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமாபல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமாபல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

10. ஜிஸ்யா வரி
பெரும்பாலான முஸ்லிம்களாலும்முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ஜிஸ்யா வரி என்பதும் ஒன்றாகும்.

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்ததுஅவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர். என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறதுஅரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும்அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையேஅதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டதுபாரபட்சமாகவும்அநியாயமாகவும் தோன்றலாம்.உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளதுதனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றதுஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறதுஅன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றதுபொருளாதாரமின்றிஇந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாதுமக்களிடமிருந்து வரிவிதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறதுஇதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளதுமுஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம்வெள்ளி மற்றும் கரன்சிகள்அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள்ஆடுமாடுஒட்டகம் ஆகிய கால்நடைகள்அவர்கள் விளைவிக்கும் தானியங்கள்மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம்வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும்நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும்இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும்இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம்விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத்மாறாகஇஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும்ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள்பரம ஏழைகள்கடன்பட்டிருப்பவர்கள்அடிமைகள்,அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள்,திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும்சுருங்கச் சொன்னால்ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும்முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர்மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கேவரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும்ஆகஇந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள்தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள்எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும்முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகைநோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும்இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள்யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும்இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும்இஸ்லாம்தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும்சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும்.முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும்இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள்இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள்இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.வரி விதிக்காமலும் இருக்க முடியாதுமுஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஜகாத் என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும்இந்த அடிப்படையிலேயே ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டதுமுஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர்பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்லஇதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.


பேரரசுகள்சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும்தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்ததுஇந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளதுபெண்கள்சிறுவர்கள்உழைக்க முடியாத முதிய வயதினர்பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்ததுதிடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்ததுஇவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதுதனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்ததுஇதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பலமடங்கு குறைவானதாகும்.

சொத்துவரிவிற்பனைவரிவருமானவரிசாலைவரிதண்ணீர் வரி,நுழைவு வரிவீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான்இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும்செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்ததுஅவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டனஅவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டனஅவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது.இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள்.அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்ததுமுஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லைஎந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்என்ற என்பதே அந்த ஐயம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம்முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும். ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள்.முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார். ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை.நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள்,பெண்கள்பைத்தியங்கள்சிறுவர்கள்முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும்அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.

PJ

Wednesday, June 6, 2012

சோதிடனிடம் சென்று


யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.                                                                                                                                                               நூல் : முஸ்லிம் 4137

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு  அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபி மொழி :                                                                                             அஹ்மத் 9171

Tuesday, June 5, 2012

பத்துக்கு அடுத்து...


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம். 
I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள்,  ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான  துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை,  தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.   இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.   குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள். 

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).   மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.  அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).  அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com  படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்  நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. 

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational  குரூப் :  தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. 
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
    இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள்  என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil  etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள்.  மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.  டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.  பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள்  டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).  12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.  
III. சான்றிதழ் படிப்பு (ITI):
   இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic  போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது. 

10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.) 
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
S.சித்தீக்.M.Tech

Saturday, May 26, 2012

உங்களைத் தேடி வரும்


குரான் வசனங்கள்,ஹதீஸ்  மொழி பெயர்ப்புடன் வேண்டுமா?
நபிமார்களின் வரலாறு தெரிய வேண்டுமா?
பெண்கள் ஸ்பெஷல் 
மற்றும் 
இதர அம்சங்களுடன்

பதிவு செய்துகொள்ளுங்கள்,

உங்கள் ஈமெயில் மூலம் 

உங்களைத் தேடி வரும்




http://tharjuma.wordpress.com/

Monday, May 21, 2012

நீங்க உஷாரா இருங்க


By Engr.Sulthan  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்
 நன்றி: தினகரன்

Thursday, May 10, 2012

ஜாஹிலிய்யா பேச்சும்,எழுத்தும்





ஒன்று) மார்க்க அறிவு இல்லாமை.

நமக்கு நம் மார்க்கம் எப்படி நடக்கச் சொல்கிறது என்று தெரியாத காலமெல்லாம் - அந்த அறியாமை இருக்கும் போதெல்லாம் மந்திர-தந்திர,தாயத்து,தட்டுக்கள் இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் எப்பொழுது குரான்,ஹதீஸ் இப்படித்தான் போதனை செய்கிறது என நாம் தெரிந்து கொண்டு விடுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் விழித்துக் கொண்டுவிடுவோம்.உதாரணமாக,சுமார் இருபது வருடங்கள் முன்பு இருந்த அறியாமை இருள் இன்று கொஞ்சம் விலகி இருக்கிறது,காரணம் - குரான்,ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு.ஆக மார்க்க அறிவு (குரான்-சுன்னா அடிப்படையில்)இல்லையன்றால் மேற்கண்ட முசீபத்துக்கள் நம்மை ஆட்கொண்டுவிடும்.


இரண்டு) மார்க்கத்தில் சமரசம் செய்தல்,

வாழ்க்கையில் பலவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம்,ஆனால் அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,குரான்-ஹதீஸ்,(இஸ்லாம்)விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.உதாரணமாக,நமக்குத் தெரிந்தவர்,வேண்டப்பட்டவர் ஒருவர் ஒரு விஷயத்தை எழுகிறார் அல்லது சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.அப்படி சொல்லப்படும்,எழுதப்படும் செய்தியை படிப்பவர்கள் முதலில் அதனை குரான்-ஹதீஸ் கண் கொண்டு நோக்கி,மார்க்க முரண் இல்லாத கருத்தாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.(அல்லாஹ்,குரானில் கூறப்படும் விஷயங்களாக இருந்தாலும் சிந்தியுங்கள் எனக் கூறுகிறான்).அது சரியான கருத்தாக இருப்பின்,அதை ஊக்கப்படுத்தலாம்,மற்றவர்களிடம் கொண்டு போகலாம்.
ஒரு சமயம்,அது மார்க்கத்திற்கு முரணாக,குரான்,ஹதீஸ் கருத்துக்கு மாற்றாக இருந்தால்,அந்தக் கருத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும்,நாம் எதிர்த்து வாதிடவேண்டும்,நம்மை திட்டினாலும்,எள்ளி நகையாடினாலும் அல்லாஹ்வுக்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.எழுதினவர் நம்ம சாச்சா,பெரியப்பாதானே,நமக்கு தெரிந்தவர்தானே என்று கொண்டு ,மார்க்க விஷயத்தில் சமரசம் பண்ணிக் கொண்டால் ,அந்த மூடக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி,இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதானோ எனும் நிலைக்கு வரும்.அல்லாஹ் பாதுகாப்பானாக.

மூன்று) இது போன்ற வார்த்தை பிரயோகம்.

தாயத்துக் கட்டு,சூடம் கொழுத்து,அணைத்து சத்தியம் செய்,படி கட்டு,( அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?)இன்னும் இது போன்றும் இன்னும் மற்ற சில வார்த்தைகளையும் நாம் பயன்படுத்துவதால்,புழங்குவதால் நாம் அறியாமையின் காரணமாக் முன்பு செய்த சில தீய பழக்கங்களை அதே பொருள்தரக் கூடிய,அல்லது அதற்க்கு நெருக்கமாக பொருள் வரக் கூடிய வகையில் இருக்கும் போது ,அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும்,நாம் பாவியாகிவிடுகிறோம்.அதனால் இது எவ்வளவு விபரீத செயல்.

அல்லாஹ்,இனி மது அருந்தக் கூடாது என தடை விதித்தவுடன்,சாராய ஊரல்களை போட்டு உடைத்தனர் நம் கண்மணிகள் சஹாபா பெருமக்கள்.ஆனால் மது குடிக்கும் கோப்பைகள்,குடுவைகளை வீட்டில் வைத்து இருந்தார்கள்.ஆனால் நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அந்தக் கோப்பைகளையும் (மதுக் கோப்பை)இனி பயன்படுத்தக் கூடாது என தடை போட்டார்கள்.சாராயத்தை போட்டு உடைத்தாயிற்று,எனவே அந்த கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாமே?ஏன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் - மொத்தமாக தடை செய்தார்கள்.இங்கேதான்,நமக்கு நம் தலைவரின் சைக்காலஜி திறன் புரிகிறது.சாராயம் இனி இல்லை என்றாலும்,அந்தக் குடுவை வீட்டில் இருந்தால்,அந்தக் குடுவையை பார்க்கும் போதெல்லாம் சாராய நினைவு வந்து விடும்,அப்படி வந்து,மீண்டும் குடிக்க நேர்ந்து விடக் கூடாது என்ற கணிப்பு.சுபானல்லாஹ்.

அடுத்து,நம் தலைவர் ஸல் அவர்கள், அய்யாமுல் ஜாஹிளிய்யாஹ் (அறியாமைக் காலம்)கால வார்த்தைகளையும் பேச தடை செய்துள்ளார்கள்.அந்த வார்த்தைகள் எல்லாமும் ஷிர்க்கை அடிப்படையாக,மூட வழக்கத்தை அடிப்படையாக கொண்டவை.நாம் மேற்சுட்டி காட்டிய வார்த்தைகளை யார் பயன்படுத்தியது,மூலம் யார் என இப்போது பாருங்கள்.ஒன்று காபிர்கள்,மற்றது குரான்,சுன்னாவை பேணாத,பித் அத களையும்,தர்காக்களையும்,தரீக்காக்களையும் கட்டி மேயும் எத்தர்கள்,(மார்க்க அறிவு இல்லாதவர்கள்).ஆக அந்த வார்த்தைகளையும்,அன்று அவர்கள் புழங்கிய அந்த வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டால்,விடை ஒன்றே.ஆக-இப்படி நாம் பயன்படுத்துபோது,நம்மிடம் அந்த செயல் இல்லை என்றாலும் - அந்த நினைப்பு இருக்கிறது,அதனால்தான் அந்த வார்த்தைகளை நாம் பேசுகிறோம்.எனவே,நாம் திருந்தி விட்டோம் என எண்ணுகிறோம்,ஆனால் உண்மையில் அப்படி இல்லை.ஏனென்றால்,அந்த ஜாஹிலிய்யா வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டு,சமயம் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கிறது,அதனால் ஈமான் பலவீனமைடைந்து,அந்த மூட வார்த்தைகள் வலுப்பெறுகின்றன.இப்படி வரும் சூழ் நிலையில் அந்த மூட செயலை(தட்டு,தாயத்து,மந்திரம்,தந்திரம் இன்னபிற) நாம் செய்யும் நிலை வந்துவிட்டால்????????????இந்த நேரத்தில் சைக்காலஜி அணுகுமுறையை நம் தலைவர் கையாண்ட முறையை மீண்டும் சிந்தியுங்கள்.மதுக் கோப்பைக்கும் தடை,அறியாமைக்கால வார்த்திகளுக்கும் தடை!!!!காரணம்,மனோ தத்துவ ரீதியாகவும் நாம் அந்த தீமைகளில் இருந்து விடுபடவேண்டும்.அந்த நினைப்பே வரக் கூடாது என்பது தானே?

இப்போதுள்ள மருத்துவர்கள் ,மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதாக நாம் அறிந்துள்ளோம்,
காலையில் எழுந்து பச்சை பசேல் என்ற காட்ச்சிகளைப் பார்த்தால் மனம் உற்சாகப்படும் என்று.
திரைப்படம் அதிகம் பார்க்கும் ஒருவனிடம் பேசினால்,படங்களில் வரும் காட்ச்சிகளை மேற்கோள் காட்டி பேசுவான்.
பழனி பாபா அவர்களை ஒருவருக்கு மிகவும் பிடிக்கும்,அவர் பேச்சை அதிகம் கேட்கிறார்,அவரை கவனியுங்கள்,பாபாவின் பேச்சும்,மானரிசமும் அவரிடம் ஒட்டிக் கொடிருக்கும்.


ஆக,அல்லாஹ்வும்,ரசூலும் கற்றுத் தராத வார்த்தைகள்(யும்)புறக்கணிப்போம்,ஏனெனில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


இக் கருத்தில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்,மனிதன் தவறு செய்யக் கூடியவனே.நிறை இருப்பின்,அது அல்லாஹ்வையே சாரும்.அல்லாஹ் நிறைவானவன்,அழகானவன்,மன்னிக்க கூடியவன்.அவனே நமக்கு போதுமானவன்.