Monday, March 12, 2012

குழந்தை முக்கியமல்ல! நல்லொழுக்கமுள்ள குழந்தையே முக்கியம்!


முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, "இறைவா எனக்கொரு குழந்தையைத் தாஎன்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, "இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தாஎன்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.
மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
ஸக்கரிய்யா ''இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.  
அல்குர்ஆன் 3:38
இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
அல்குர்ஆன்  37:100
எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும்எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). 
அல்குர்ஆன் 2:128
என் இறைவா! என்னையும்என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) 
அல்குர்ஆன் 14:40
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும்,மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!''என்று அவர்கள் கூறுகின்றனர். 
அல்குர்ஆன் 25:74
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான். 
அல்குர்ஆன் 2:124
மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது. 

மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்
ஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், "என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: அஹ்மத் 10202
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி.         3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: முஸ்லிம் 3358

அழகிய முன்மாதிரி
திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.
நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.
"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது''என்று இப்ராஹீமும்யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
 அல்குர்ஆன் 2:132
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போதுநீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும்உங்கள் தந்தையரான இப்ராஹீம்,இஸ்மாயீல்இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்''என்றே (பிள்ளைகள்) கூறினர். 
அல்குர்ஆன் 2:133
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! 
அல்குர்ஆன் 31:13
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோவானங்களிலோபூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்;நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). 
அல்குர்ஆன் 31:16-19
நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.
தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள். 
மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத்நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.
ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு "முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?'' எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி (1485)

முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.
"சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
"நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.
நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டனஏடுகள் காய்ந்துவிட்டன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
 நூல்: திர்மிதி 2440
சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.
(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்) 
நூல்: புகாரி 6247
இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், "சிறு கற்களை எறியாதே. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்அல்லது "சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும்நபி அவர்கள் "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாதுஎந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாகஅது பல்லை உடைக்கலாம்கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)என்று சொன்னார்கள்'' எனக் கூறினேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்அல்லது "சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால்நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயேநான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) 
நூல்: புகாரி 5479

ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும்.
அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும்உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும்நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும்இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ,உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்;ஞானமிக்கவன். 
அல்குர்ஆன் 24:58, 59

மறுமைக்கு அஞ்சுவோம்
பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்?உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்எவற்றைச் செய்ய வேண்டும்எவற்றைச் செய்யக் கூடாதுபோன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.
மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். 
அல்குர்ஆன் 66:6
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி)தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) 
நூல்: புகாரி 2409
பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும்எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்''எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
 அல்குர்ஆன் 33:67
சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.
ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல்செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.
கே.எம். அப்துந் நாசிர் - இஸ்லாமியக் கல்லூரிமேலப்பாளையம்

Saturday, March 10, 2012

அழகிய கடன் I.A.S. அகாடமி


அழகிய கடன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஜனவரி மாதம் "அழகிய கடன் I.A.S. அகாடமிஎன்ற பெயரில் IAS/IPS பயிற்சி மையம் ஒன்று துவங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்!!.

நோக்கம்

கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் மேம்படவும்இறையச்சம் உள்ள முஸ்லிம்கள் அதிகார மையத்தில் அமர்ந்து அனைத்து துறைகளையும் இயக்கும் உயர் பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 சேர்க்கை (Admission)
இதற்கான முதற்கட்ட சேர்க்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 120 முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு (Interview) பிறகு சுமார் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பயிற்சி

இந்த 20 மாணவர்களுக்கு I.A.S. பரீட்சைக்கு தேவையான பயிற்சிகள் முழு வீச்சில் தரப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிதங்குமிடம்உணவு,புத்தகங்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது,அல்ஹம்துலில்லாஹ்!
தற்பொழுது திறமையான பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் பாடங்கள் பயிற்றுவிக்கபடுகின்றன. இம்மாணவர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் மே 20-ம் தேதி நடைபெறவிருக்கும் I.A.S பரிட்சையில் (preliminary) கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் வெற்றி பெற வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆமீன்.

இது தொடர்பான ஆடியோ / வீடியோ-விற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிர்வாகக்குழு

இந்த பயிற்சி மையம் மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களை தலைவராக கொண்டுமற்றும் Governing Body அமைப்பில் அபுல் ஹசன் I.A.S. (retired), R.D.நசீம் I.A.S., பேரா. இஸ்மாயில் (முன்னாள் முதல்வர்அரசு I.A.Sபயிற்சி மையம்)திரு. கார்த்திகேயன் (இயக்குனர்மனித நேயம் I.A.Sபயிற்சி நிலையம்), S.அஹ்மத் மீரான் (Professional Couriers) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மேலான வழிகாட்டுதலுடன்சைதைS.துரைசாமியின் மனிதநேய I.A.S. பயிற்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.

செலவுகள்

இந்த பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் பயிற்சியாளர் சம்பளம்,ஊழியர் சம்பளம்உணவுதங்குமிடம்புத்தகங்கள் போன்ற அனைத்துக்கும் சேர்த்து ஒரு மாதத்திற்கு ரூ. இலட்சம் முதல் 1.25 இலட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேண்டுகோள்

இஸ்லாமிய சமுதாயம் மேம்படவும்இளைஞர் சமுதாயம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வீறு நடை போடவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த உன்னதமான முயற்சியில் உங்களின் பங்களிப்பின்றி நாங்கள் வெற்றி பெற முடியாது. எனவேவல்லோன் அல்லாஹ்வின் அருட்கொடை மீதும்,உலகிலேயே தர்ம சிந்தனை உள்ள சமுதாயமான நம் சமுதாயத்தின் தர்ம சிந்தனையின் மீதும் நம்பிக்கை வைத்து இம்முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த அற்புதமான இறைப்பணியில் தாங்களும் பங்கெடுத்து தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய முயற்சிகளை இக்லாசான முயற்சிகளாக கபூல் செய்து அதற்குரிய பரிபூரண கூலியை தந்தருள்வானாக. ஆமீன்.

தொடர்புக்கு

அழகிய கடன் அறக்கட்டளை,
மக்காஹ் மஸ்ஜித் வளாகம்,
822, அண்ணா சாலை,
சென்னை - 600 002
Ph. 044-4214 1333, Cell: 9840889678, 9840899012,
கூடுதல் தகவலாக,

இது தொடர்பாக நமது சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிமாவட்டந்தோறும் சமுதாய ஆர்வலர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறதுஇது வரை 4 மாவட்டங்களில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாம்இதுவல்லாத மற்ற மாவட்டங்களில் இக்குழுவை அமைத்து சமுதாய சேவையாற்ற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்9600006246 (சகோ. ஆரிப்)

இது தொடர்பாக சவூதி அரேபியாவில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள,

சகோசிக்கந்தர்ரியாத் (00966551841027)
சகோசாதிக்ஜித்தா (00966559609469)

இச்செய்தியை நீங்கள் படிப்பதோடும் சிந்திப்பதோடும் நிறுத்தி விடாமல்,மற்ற சகோதரர்களுக்கும் கொண்டு சென்று இது தொடர்பாக உங்கள் ஆலோசனைகளையும் ஆதரவையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

சமுதாயத்திற்காக சிந்திப்போம்திட்டமிடுவோம்இன்ஷா அல்லாஹ் (இம்மை & மறுமையில்வெற்றி பெறுவோம்.


அன்புடன்
அனீஸ் முனவ்வர்
அல்கோபர்சவூதி அரேபியா

(
மாதவலாயம்குமரி மாவட்டம்)

Sunday, March 4, 2012

அந்த நூறு பேர்கள்


"100 பேர்" நூல் முதலில் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன
(இதன் தமிழ் முதல் பதிப்பு1998).இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு.



இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் ஏற்ப்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குகொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.சரியான செய்தியைக் கொண்டு சேர்த்தார்.இந்நூல் ஆசிரியர் கிறிஸ்துவர் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.

இங்கு கணொளியாக ஆங்கில புத்தகத்தின் விளக்கம்இனி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணமேன்ன என்பதை நூலாசிரியர் தனது முதல் அத்தியாயத்தில் சொல்வதை பார்ப்போம்.

1
முஹம்மது நபி (570-632)இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்;மற்றும் சிலர் “ஏன் அப்படி” என்று வினாவும் தொடுக்கலாம்: ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும்,எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது

.உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பேற செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று:கிரிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவர்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரனமாக இருந்தாலும், அதன் இறையமையிலை (THEOLOGY) உருவாக்கியதில் முதனமையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்,புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான துய பவுல்தான்.(St.PAUL)ஆனால் இஸ்லாத்தின் இறையமையியல் (THEOLOGY) அதன் அரநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். 

அன்றியும் அசமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொருப்பினை மேற்க்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தான்.முஹம்மது நபி வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன: அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும்,போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவவத்தின் மீது ஏசுநாதரும்,தூய பவுலும் ஒருங்கினைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.

 சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.இரண்டாவது:மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல்,முஹம்மது நபி சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவாரக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.
 
 

Friday, February 17, 2012

குகையினுள் தஞ்சம்


அல்லாஹ் தன் திருமறையில் பின்வாறு விவரிக்கிறான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். அல்குர்ஆன் 18:9-22
Bones of Cave peopleBones of Cave people
அவர்களது எலும்புகள்

குகை
Jaw bones of Cave people's dog
அந்த நாயின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு
அவர்களது சடலங்கள் குகைக்குள் வெவ்வேறு கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஓரே கல்லறைக்குள் மாற்றப்பட்டன. இப்பொழுதும் அவர்களது எலும்புகளை கல்லறைக்குள் காணலாம்.

இக்குகை ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது. 
 

Saturday, February 11, 2012

அமெரிக்காவில் என்ன நடக்கிறது

முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தாய்,தந்தை,குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்,ஆலிம்கள் என்று மரியாதை வைத்து இருந்தார்கள்.அவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது,அதுக்கும் மேல்,அல்லாஹ்வின் மேல் பயமும்,ரசூல் ஸல் அவர்களின் மீது மிக்க மேலான பாசமும் இருந்தது,(இன்றும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை).ஆனால் அன்று நம் மாணவர்களை மார்க்கம் வழி நடத்தியது,இன்று கேடு கெட்ட சினிமாவும்,நாடகமும்,சீரழிவு ஊடகங்களும் வழி நடத்துகின்றன.

அல்லாஹ்வை நினைத்து அழுத பெண்கள்,இன்று நாடகத்தில் வரும் காட்சிகளை பார்த்து அழுகின்றனர்.ஆசிரியர்கள் பள்ளியில் நடப்பதை வைத்து மட்டுமே மாணவர்களை திருத்த முடியும்,எனவே,பெற்றோகளுக்கு மட்டுமே அதிக அக்கறை வேண்டும்.

அரசு,காவல் துறை,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்கள் என்று ஒரு லிங்க் இருக்க வேண்டும். 
ஒரு உதாரணமாக,அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

காலை எட்டு மணிக்கு பள்ளிகள் திறந்து,மதியம் இரண்டு - முப்பதுக்கு முடியும்.இந்த இடைபட்ட நேரத்தில் மாணவர்களை ரோட்டிலோ,ஷாப்பிங் மால்களிலோ,வேறு எங்கோ கண்டால்- காவல் துறையினர் பிடித்து விசாரிப்பார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத நாளில்,வீட்டுக்கு உடனே பள்ளியிலிருந்து போன் வந்து விடும்.

ஹோம் வொர்க் மற்றும் பள்ளி சம்பந்தமான எல்லா வேலைகளையும் முடித்து மாணவர்கள் - பெற்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

அடிக்கடி மாணவர்கள் - பள்ளிக்கு விடுமுறை எடுத்தால்,காவல் துறை தலைவரிடமிருந்து(ஷெரீப்)பெற்றோருக்கு சம்மன் வரும்.

பள்ளி நேரம் முழுக்க காவல் துறை பள்ளி வளாகத்தை(patrol) சுற்றி வரும்.

ஆசிரியர்,மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு சக மாணவன் போல் பழகுவார்கள்.

பள்ளி சம்பந்தமான போர்ட் மீட்டிங்குக்கு கூட,பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்பார்கள்.

இப்படி நம்மூரிலும்,செய்யலாம்.

கொசுறு :(இங்கும் - பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டுதான் இருக்கிறது,ஆனால் அதைக் களைய மேற்சொன்ன மற்றும் பலவிதங்களில் போராடிவருகின்றாகள்.)

Result:அமெரிக்காவோ,இந்தியாவோ இஸ்லாம் சொல்வதை கேட்டு நடந்தால் - அமுல் படுத்தினால் எல்லாரும் நன்றாக இருக்கலாம்.இல்லையெனில் இது போன்று நடப்பதை தவிர்க்க இயலாது.இதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்லி வைக்கிறேன்.

Wednesday, February 8, 2012

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்றுசுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்புஅதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)நூல் : புகாரி (5020)

TO READ MORE........

Sunday, January 22, 2012

பள்ளிவாசல் சுவற்றில் அக்கிரமம்,மதுரையில் பரபரப்பு


மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மது‍ரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். நெல், வாழை, தென்னை உள்பட பயிர்கள் வைகை ஆற்றின் கரையில் பயிரிடப்பட்டு உள்ளன.
இங்குள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு மசூதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை உள்பட 5 வேளை தொழுகை நடந்து வருகிறது. இந்த மசூதி சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த சிலதினங்களுக்கு முன்பு அதாவது கடந்த 16 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட பட்டிமன்றத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும் கலந்து கொண்டனர். இதில் சொந்தமா, சொத்தா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
இந்தப் பட்டிமன்றம் நடந்த மறுநாள் இரவு (17.01.2012) சில சமூக விரோதிகள் மசூதியின் வெளிப்புற சுவரில் மனித மலத்தைப் பூசி, அதில் முஸ்லிம்களை கெட்டவார்த்தைகளால் திட்டி எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அடுத்தநாள் அதிகாலை தொழுகைக்காக முஸ்லிம்கள் மசூதிக்கு வந்தபோது சுவற்றில் கொச்சையாக மனித மலத்தால் எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு  யாரோ சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை மசூதி வாசலில் போட்டு உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழமாத்தூர் முஸ்லிம்களும், ஜமாத்தார்களும் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீது மட்டு‍‍மே கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு நேற்று வரை வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் நேற்று காலை அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மதுரை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், "கீழமாத்தூர் மசூதி சுவற்றில் மலத்தால் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தி எழுதிய சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று புகார் தெரிவித்து இருந்தனர். மேலும், "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
சாலை மறியல் மற்றும் முஸ்லிம் அமைப்பின் புகாரை தொடர்ந்து எஸ்.பி. உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், ஆய்வாளர் பொம்மைசாமி மற்றும் காவல்துறையினர் கீழமாத்தூர் விரைந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர்கள் அங்கு பாதுகாப்பு பணிக்காக காவலர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, மதுரை காஜிமார் தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதேபோல, பன்றி தலையை மசூதியில் வைத்ததோடு மனித கழிவை மசூதி சுவற்றில் பூசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மதுரையில் மசூதிகளை அவமதிக்கும் செயல்கள் முஸ்லிம்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஏதோ ஒரு திட்டமிட்ட கலவரத்துக்கான சதி வேலைதான் என முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மிகப்பெரிய கலவரம் ஏதும் உருவாகும் முன்பாக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூகவிரோதிகள் மீது அரசு கடும் நடவடி்ககை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Monday, January 16, 2012

மரண அறிவிப்பு

பாக்கிஸ்தான்பைசலாபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட அர்பா கரீம் நெற்று வபாத்தானது முஸ்லிம் நெஞ்சங்களை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVxCE9flq4BKN02ZSOJhxtRYetdVI0QNMHkuaT0oNNuojrQrJRtc0cIOrzQYMjciJ1yr-Yah6LEXJ_EaErM6YwJOlcES-eHxb03bPFiJ4o3Wtv_fKmZSop_AeWwXYJ_slmoYZqJNsU6wJA/s1600/ne3.jpg


1995இல் பிறந்த (16 வயது) அர்பா கரீம் உலகில் மிக சிறிய வயதில்Microsoft certified professional (2004 - 2008)பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2005 ம் ஆண்டு விஞ்ஞானத்திற்கும் தொழில்நுட்பத்திற்குமான Fatimah Jinnah Gold Medalஐ பாக்கிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து பெற்றார்.


சென்ற வருடம் 16 வயதாக இருக்கும் போது லாகூர் இல் உயர்த்தர படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோயும் அதனை தொடர்ந்து வந்த Cardiac arrest எனப்படும் இதய நோயும் அவரை தாக்க அவர் அதற்கான சிகிச்சைகளை லாகூர் இராணுவ வைத்தியசாலையில் மேற்கொண்டு வந்தார்.


இவரின் சுகயீனம் பற்றி அறிந்தMicrosoft  நிறுவனத்தின் தலைவர் Bill Gates அர்பாவின் பெற்றோரை சந்தித்து.அவரின் சிகிச்சைக்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டதோடுஅவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்குவதற்கும் முன்வந்தார்.
http://www.thenewstribe.com/wp-content/uploads/2012/01/Arfa-Karim-and-Bill-Gaets.jpg
இருப்பினும் நாட்களுக்கு முன் மூளையின் சில பாகங்கள் செயலிழந்ததால் கடும் சுகயீனத்துக்கு ஆளானார்.அதனை தொடர்ந்து நேற்று இரவு எந்தவித சிகிச்சையும் பலனளிக்காது லாகூர் வைத்தியசாலையில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.


[21:35] Every soul shall have a taste of death: and We test you by evil and by good by way of trial. to Us must ye return.

Tuesday, December 13, 2011

தேவை உதவி


புதுமனைதெருவை சேர்ந்த நெய்னா என்ற சகோதரர் (தந்தை பெயர் மர்ஹூம் ஹாஜா முஹைதீன்)சிறிது காலம் முன்பு ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் பொது ஏற்பட்ட விபத்தில் தலையில் உள் காயமடைந்து,தற்போது அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு (மூளையில் ரத்தக் கட்டு )
அவரைத் தள்ளியுள்ளது.இதற்கு உடன் ஆபரேஷன் பண்ணுவதே வழி என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.எனவே,அவர் தற்போது பெங்களூரில் உள்ள சென்ட்ரல் கவர்ன்மென்ட் மருத்துவமனையில் - நியூரோ சர்ஜன் பிரிவில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்,அவருக்கு என எந்த வித வருமானமோ,சொத்துக்களோ இல்லை,மேலும் அவருக்கு சிறு வயதில் போலியோ ஏற்பட்டதன் காரணமாக இரு கால்களும் ஊனமானவர்.அவருடைய சில உறவினர்களின் உதவியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நம் சகோதரர்கள் தங்கள் உதவிகளை தாரளமாக வழங்கினால் - மிகவும் உதவியாக இருக்கும்,எல்லாம் வல்ல அல்லாஹ் - தன கருணை மழையை பொழிவான்,ஆமீன்

BANK DETAILS
H.ANWER HUSAIN
A/C NO 10885982755
STATE BANK OF INDIA
RAJAJI SALAI BRANCH
CHENNAI 600001
CONTACT :H ANWER HUSAIN 9840640603
தகவல் அப்துல் கரீம்,கலிபோனியா 

3:92நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

57:7நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.

Monday, December 12, 2011

குர்ஆனின் அத்தாட்சிகள்


ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.
அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும்,திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.
அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
பூமியில் பிராயாணம் செய்துகுற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
source : Tamil Quran.com
  
    He who produced you from one soul and [gave you]a place of dwelling
   and of storage. We have detailed the signs for a people who understand.

   உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின்
   (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) 
   ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக்
   கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
   Al-Aann'm 6-98

பிரியமுடன்.
  MOHAMMED SHERIFF

Monday, December 5, 2011

அவதூறு கூறாதீர்கள்


எவர்கள் முஃமினான, ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.  

(அல் குரான் – 24:23)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவைபற்றி சாட்சியம் கூறும்

(அல் குரான் 24: 24)