Sunday, September 11, 2011

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்


அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான். (அல்குர்ஆன் ஆலு இம்ரான்3 :180)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்,அத் தவ்பா, 9:34)
அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ‘(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். என்று கூறினார்கள்;. (ஹதீஸ் சுருக்கம்.புகாரி 7061)
மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்:
ஒரு மனிதனிடம் இன்னொருவர் வாங்கிய தொகையை தரவில்லை என்றால், எவ்வளவு கோபப்படுகிறான் அந்த மனிதன். ஆனால் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கின்றி பெற்றுக்கொண்ட நாம் அவன் ஏவல் விலக்கள்களை ஏற்று நடக்கின்றோமா என்றால் இல்லை. ஆதனால் தான் வல்ல ரஹ்மான் இப்படிப்பட்ட குணமுடையவர்களை நன்றி கெட்டவர்கள் என்றும், இந்த நன்றி கெட்டத் தனத்திர்க்கு அவனே சாட்சியாக இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.

إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
(அல்குர்ஆன்,அல்ஆதியாத்100:6,7,8)
தனக்கே கேடு:
கஞ்சத்தனம் செய்வதால் நம்முடைய செல்வம் நம்முடனேயே இருக்கும் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அந்த செல்வமே தனக்கு கேடாக மறுமையில் நிற்கும் என்பதையும், பெரும் அழிவைத் தரும் என்பதையும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருப்பது சத்தியத்தை புரக்கனிக்கும் செயல் என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.

هَا أَنتُمْ هَٰؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنكُم مَّن يَبْخَلُ ۖ وَمَن يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَن نَّفْسِهِ ۚ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنتُمُ الْفُقَرَاءُ ۚ وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُم

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம்உடையோரும் இருக்கிறார்கள். ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் – அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் – நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், நீங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தை அவன் பகரமாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன், முஹம்மத்47:38)
நபி ஸல்லல்லாஹூஅலைஹிவசல்லம் கூறினார்கள்..
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.”என அபூ ஹுரைரா(ரலி)அவர்கள் அறிவித்தார்கள்.(நூல் புகாரி 5299)
கஞ்சத்தனம் செய்ய தூண்டுபவருக்கும் கேடு:
நம்மில் சிலர் இருக்கின்றார்கள், தானதர்மம் செய்பவர்களையும் கண்டிப்பதுடன், இப்படியெல்லாம் செலவு செய்தால் வருமை நிலைக்கு வந்துவிடுவாய் என அச்சுருத்தி, ஏதோ நன்மையான காரியம் செய்துவிட்டது போல் திருப்திபட்டுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் நாளை மறுமையில் நரக வேதனையுண்டு என அல்லாஹ் வண்மையாக கண்டிக்கின்றான்.

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا

அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன், அந் நிஸா 4:37)

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ ۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

எவர்கள் கஞ்சத்தனம்; செய்து கஞ்சத்தனம்; செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ! எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறார்களோ! – (இவர்களே நட்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன் . (அல்குர்ஆன், அல்ஹதீத்57:24)
திடீரென வரும் அல்லாஹ்வின் தன்டணை:
பொருளாதாரம் நிறைந்திருக்கக்கூடியவர்கள், உல்லாச வாழ்கையையும், சுகபோக வாழ்கையையும் அனுபவிப்பதை பார்த்து நம்மில் பலர் பெருமூச்சு விடுவதை பார்க்கின்றோம். அல்லாஹ்வின் போதனைகளை, கட்டலைகளை மறந்து வாழ்கின்ற இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அல்லாஹ் செல்வவத்தின் வாசலை திறந்து விடுவதாக கூறுகின்றான். ஆனால், இவர்களின் இந்த உல்லாச வாழ்கையும், செல்வமும் நிரந்தரமானது அல்ல. மாராக அல்லாஹ்வின் தன்டணையைதான் கொண்டுவரும்.

فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَابَ كُلِّ شَيْءٍ حَتَّىٰ إِذَا فَرِحُوا بِمَا أُوتُوا أَخَذْنَاهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் – பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர் (அல்குர்ஆன்,அன்ஆம் 6:44)
மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்…

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

(அத்தகையவன் செல்வமே சதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் காக்கும்) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்றும் அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

அது (உடலில் பட்டதும்) இருதயத்தில் பாயும்.
(அல்குர்ஆன்,ஸூரத்துல் ஹுமஜா 104: 2-7)
தயால குணம்:
ஜாபிர்(ரலி) கூறினார்கள்…நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையாக நான் அவர்களிடம் சென்று, ‘உங்களிடம் நான் (முதல் முறையாகக்) கேட்டும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் உங்களிடம் கேட்டேன். நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று, நீங்கள் எனக்குத் தரவேண்டும்; இல்லையெனில், என்னிடம் நீங்கள் கஞ்சத்தனம் காட்டுவதாகப் பொருள்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், ‘நான் உங்களிடம் கஞ்சத்தனம் காட்டுகிறேன் என்றா சொன்னீர்கள்? நான் உங்களுக்குத் தராமலிருந்துவிட்ட ஒவ்வொரு முறையும் உங்களுக்குத் தர விரும்பிய நிலையில் தான் (இருந்தேன்; இருப்பினும் தவிர்க்க முடியாத காரணத்தாலேயே) அப்படிச் செய்தேன்” என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘எனக்கு அபூ பக்ர்(ரலி) கைகள் நிறைய ஒரு முறை அள்ளித் தந்துவிட்டு, ‘இதை எண்ணிக் கொள்’ என்று கூறினார்கள். நான் (எண்ணிப் பார்த்த போது) அது ஐந்நூறு(திர்ஹம்) இருக்கக் கண்டேன். அபூ பக்ர்(ரலி), ‘இது போன்றதை இரண்டு முறை எடுத்துக் கொள்’ என்றார்கள்” என்று ஜாபிர்(ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்)அவர்கள், ‘கருமித் தனத்தை விட மோசமான நோய் உண்டா?’ என்றார்கள்.
கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்பு தேடல்:
நபி(ஸல்)அவர்கள்.. கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்… நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்;… நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன்.
அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். (நூல் புகாரி 2893)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள். (நூல் புகாரி 4707)
அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
http://www.islamkalvi.com/portal/?p=5598

Tuesday, September 6, 2011

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். 

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. 



அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன். 

  • பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது. 
  • லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.  
  • இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார். 
  • TO READ MORE........
PLEASE CLICK HERE

Monday, September 5, 2011

சாலையின் உரிமை என்ன?

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். அப்போது மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது.  அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்என்றார்கள். 


அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால்சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், 'சாலையின் உரிமை என்னஇறைத்தூதர் அவர்களே!என்று வினவினர்.


 நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்சலாமுக்கு பதிலுரைப்பதும்நன்மை புரியும் படி கட்டளையிடுவதும்தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள். 6229. 


நபி(ஸல்) அவர்கள் கூறியதாக,  அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள். 

தோழர்கள்


Sunday, September 4, 2011

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள்


இது வரை நடந்த, எதிர்காலத்தில் கியாமத் நாள் நெருங்கும் வேலையில் நடக்க இருக்கின்ற அதிசயங்கள் பல நிறைந்த அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் 
 (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள். 

Pls Visit


Saturday, September 3, 2011

வேட்பாளருக்கான தகுதிகள்


உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாகி உள்ளன. அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன. சுயேச்சையாகப் போட்டியிடவும் பலர் தயாராகி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை கட்சிகளின் பலம் ஒரு புறம் இருப்பினும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பலமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும்.
இதனாலேயே பொதுத் தேர்தலைவிட உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சைகள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளருக்கான தகுதிகள்:
போட்டியிட விரும்புபவரின் பெயர் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
* 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
மத்தியமாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களாக அல்லாது இருக்க வேண்டும்.
வேட்பாளர்களின் தகுதியின்மை:
ஓர் அரசு ஊழியர் கையூட்டு (அ) அரசுக்கு எதிரான செயல்கள் போன்ற காரணங்களினால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு எந்த ஓர் உள்ளாட்சி அமைப்பிலும் பதவி வகிக்கவும் பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் உடையவராவார்.
குற்றச் செயல்களுக்காக நீதிமன்றத்தால் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்தீர்ப்பு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு ஆண்டு கால அளவிற்கு போட்டியிட தகுதியற்றவர்.
* 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37-ன் உட்பிரிவு (1)-ல் விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தால் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின்அந்தத் தண்டனை அபராதமாக மட்டுமிருப்பின் - குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட காலத்துக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
அதைப்போல அந்தத் தண்டனை தீர்ப்பு சிறைவாசமாக இருப்பின் - தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத்தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்தும் ஆறு ஆண்டு காலங்களுக்கும் போட்டியிடத் தகுதியற்றவராவார்.
ஒரு நபர் ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை அடைந்திருந்தாலோ அல்லது ஊராட்சிகளைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றிருந்தாலோ மற்றும் நகராட்சியைப் பொறுத்தவரை ஆறு மாத காலங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை பெற்றிருந்தாலோ அந்த நபர் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்ட நாளிலிருந்து உறுப்பினர் தேர்தலுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு அந்த நபர் விடுவிப்பு அடைந்த நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டு காலத்துக்கு தகுதி நீக்கம் உடையவராவார்.
பிற தகுதி நீக்கங்கள் :
ஆரோக்கியக் குறைவான மனநிலைகாதுகேளாதபேசாத நிலை கொண்டவராயிருப்பவர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
திவாலானவரெனத் தீர்மானிக்கப்பட்டவர் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
நிறுவனமொன்றின் (இயக்குநர் அல்லாத பிற) பங்குதாரர் நீங்கலாகஊராட்சி எதற்காகவும் அதனுடன் செய்யப்பட்டு இப்போது இருந்து வருகிற ஒப்பந்தம் எதிலும் அல்லது அதற்காகச் செய்யப்பட்டு வருகின்ற பணி எதிலும் உரிமை நலன் கொண்டவராக இருப்பாராயின் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்தவராக இல்லாதிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
உள்ளாட்சி அமைப்பிற்கு எந்த வகையேனும் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியவராயிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
அந்த ஊராட்சியின் சார்பிலான ஊதியம் பெறும் சட்டத் தொழிலாற்றுபவராகவோஅல்லது எந்த ஒரு ஊராட்சிக்குஉள்ளாட்சிக்கு எதிரான சட்டத் தொழிலாற்றுபவராகவோ பணியமர்த்தப்பட்டிருப்பின் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
வாக்காளர்கள் தகுதியின்மை:
ஆரோக்கிய குறைவான மனநிலை உள்ளவர் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.
நீதிமன்றத்தால் தேர்தல் குற்றங்களுக்காக தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.

ஆயத்துல் குர்ஸி

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே,உறக்கமோ பீடிக்காவானங்களிலுள்ளவையும்பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும்அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.அவன் ஞானத்திலிருந்து எதனையும்அவன் நாட்டமின்றிஎவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும்பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்மகிமை மிக்கவன்.

Thursday, September 1, 2011

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?


சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா ?

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கழித்தால்

பாத்ரூமில் துஆக்களை ஓதலாமா ?

சிறுநீரை அடக்கிக் கொண்டு தொழலாமா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குனம் உள்ளதா?

மண்ணறை வேதனைகுறியவர்கள் யார்?

நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாமா?

தொழும் போது சிறுநீர் வெளிப்படும் போது

சிறுநீர் கழித்தபின் மீண்டும் சிறுநீர்

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?

குழந்தையின் சிறுநீர் பட்டால்



Wednesday, August 31, 2011

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்


ஷவ்வால் மாத நோன்பு.

யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன்" என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். "இந்நாளின் சிறப்பென்ன?" என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது மகத்தான நாளாகும். இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், "நாங்கள்தாம் மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள்" என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் (முஸ்லிம்களை) நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய(ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும், "நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (இது ஹிஜிரீ 10ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகும்).

மாதத்தில் மூன்று நோன்புகள்.

"மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்கவும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு 

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

"ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், "வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா?" என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றிவெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

"உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்,(சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்றுவிடட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதற்குத் தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

"அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை" என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?" என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான்(எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன். நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன்"என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

"மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, "இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது" என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

(சத்தியமார்க்கம் இணையதளத்தில்இருந்து )

Sunday, August 28, 2011

ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

 

இது ஒரு சத்திய முழக்கம்


சத்திய முழக்கமாக,
உண்மையின் உறைவிடமாக,
ஏக இறை கொள்கை நெறி பூண்டு,
இணையத்தில் 
உலா வரும் 

சக்தியின் 
காணுங்கள்,
ஊக்கப்படுத்துங்கள்.








Saturday, August 27, 2011

காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்...


ஜூலை 26 ஸ்ரீ நகரின் காலை பொழுது தொழுகையோடு விடிந்தது. பக்கத்தில் அழகான ஒரு பள்ளிவாசலும் இருந்தது.
 
நாங்கள் ஸ்ரீ நகருக்கு ஒரு சுற்றுலா பயணிகளை போல தான் வந்தோம். காரணம் இங்கு மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டோ, பத்திரிகையாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டோ வருவது மிக பெரிய ஆபத்து.
 
அரசும், உளவுத்துறையும், அரசு படைகளும் ஒரு காலத்திலும் காஷ்மீரிகளின் துயரங்களை வெளி உலகுக்கு காட்டி விட கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.
 
நாங்கள் போன சமயம் சீக்கியர்களின் புகழ்பெற்ற தலைவரும், முன்னாள் நடாளுமன்ற வாதியுமான சிம்ரன்ஜித் சின் மான் காஷ்மீர் மக்களை சந்திக்க வந்தார். ஜூலை 22 அன்று மான் அவர்கள் ஜிலானியை சந்தித்து விட்டு தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க விருந்தார். ஆனால் நாங்கள் போன அன்று அவரை காஷ்மீரிலிருந்து வெளியேற்றி ஸ்ரீ நகர் விமான நிலையத்திலிருந்து அவரை மாநில அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
 
 
இது காஷ்மீர் டைம்ஸ்,  கிரேட்டர் காஷ்மீர் உள்ளிட்ட ஆங்கில பத்திர்க்கைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்படிருந்ததை படித்தோம். மேலும் தெற்கு காஷ்மீரில் குல்காம் என்ற பகுதியில் ருக்கையா பானு என்ற காஷ்மீர் பெண்ணை இந்திய ராணுவத்தினர் கற்பழித்ததால் ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெற்று கொண்டு இருந்தன.
 
காஷ்மீரின் முக்கிய தலைவர்களான செய்யது அலிஷா ஜிலானி, சபீர் உள்ளிட்டோர் வீட்டு காவலில் முடக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்தோம்.
நாங்கள் வந்திருந்த சூழல், மிகவும் பதற்றமாக இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
 
அதே நேரம் காஷ்மீர்களிடம் நெருங்கி பழகி அவற்றை பேட்டிகளாக எடுத்து மக்கள் உரிமையில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இறைவன் இருக்கிறான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு ஸ்ரீநகரில் வலம் வர புறப்பட்டோம்.
 
எமது சந்திப்புகளையும், உரையாடல்களையும் கவனமாக கையாண்டு அவற்றை பேட்டிகளாக பதிவு செய்ய வேண்டுமென்று எங்களுக்குள் முடிவுஎடுத்து கொண்டோம். ஒரு உண்மை அறியும் குழுப்போலவே எங்களது அணுகுமுறைகள் இருந்தது.
 
நாங்கள் சந்தித்த ஸ்ரீநகர் மக்கள் எங்களுக்கு வித்தியாசமாக இருந்தார்கள். அவர்களது தோற்றம், ஆடைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்களைப்போலவே இருக்கிறார்கள் என வழக்கறிஞர் வாசுதேவன் கூறினார். அது தான் உண்மை. இனம் என்று பார்த்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது அறிவியல் மற்றும் வரலாற்று உண்மையாகும்.
 
நாங்கள் முதலில் சந்தித்த காஷ்மீரியரின் பெயர் ஆபித் அலி. இவர் ஒரு வணிகர்.
 
காஷ்மீர் பிரச்கனை குறித்து அவரோடு பேசினோம். சட்டென்று பொறுமை இழந்தவராய் பேசத் தொடங்கினார்.
 
1931& லிருந்து இப்பிரச்னை தொடங்கியது. 1948 &ல் பாகிஸ்தான் ஆதரவு பட்டாண்கள் காஷ்மீருக்குள் நுழைந்த போதுதான், மன்னர் கரண்சிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 
காஷ்மீரை காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்திய ராணுவம் அப்படியே தங்கிவிட்டது. அது முதல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்றவர் 1989 லிருந்துதான் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் (போராட்டக்காரர்கள்) குழுக்கள் உருவாகின.
 
அதுமுதல் 22  ஆண்டுகளாய் நாங்கள் சந்தித்துவரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இங்கு ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது எனலாம்.
 
1989லிருந்து இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகளை இந்தியா கொன்றுள்ளது. ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என நாங்கள் கருதுகிறோம்.
 
இதனால் விதவைகளின் எண்ணிக்கையே 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக உள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொடுகிறது. விசாரணை என்ற பெயரில் அரசுப் படைகள் பலரை இழுத்துச் சென்றிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் பல ஆண்டுகளாக என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இப்படி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 ஆயிரத்தை தாண்டுகிறது.
 
எத்தனையோ மனைவிகள் தங்கள் கணவர் வருவார் என்ற நம்பிக்கையாலும், பல தாய்மார்கள் தங்களை காப்பாற்ற தங்கள் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும், எத்தனையோ பிள்ளைகள் தங்கள் தந்தையை ஒருநாள் காண்போம் என்ற நம்பிக்கையிலும், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் ஒருநாள் வருவார்கள் என்ற நம்பிக்கையிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆபித் அலியின் வாக்குமூலம் எங்கள் அனைவரையும் உலுக்கியது.
 காஷ்மீரில் பிராமண பண்டிட்களும் கொல்லப் பட்டிருக்கிறார்களே என்ற அடுத்த கேள்வியை முன் வைத்தோம்.
 
அதிகபட்சமாக 500 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடாது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
500 பண்டிட்டுகளின் மரணங்களை பெரிதுபடுத்தும் இந்திய ஊடகங்கள், 3 லட்சம் காஷ்மீரிகள் சொல்லப்பட்டதை ஏன் பேசுவதில்லை. அது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது என்றவர், அகதிகளாக வெளியேறிய பண்டிட்டுகள் எப்போது வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
எங்களுடைய முதல் நேர்காணல் மிகவும் வேதனையுடன் தொடர்ந்தது.
 
ஆபித் அலியை தொடர்ந்து, பிர்தௌஸ் என்பவரை சந்தித்தோம்.
இவர் மளிகை உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறார். எடுத்ததுமே வேகமாக பேசினார்.
 
எங்களின் இதயங்களை தொடக்கூடிய எந்த வேலைகளையும் இந்திய அரசு செய்வதில்லை. மாறாக எங்களை அதிகம் காயப்படுத்துகிறது என்றவர், காஷ்மீருக்கு கூடுதலாக வரிகளை விதித்து மக்களை வதைப்பது என்ன நியாயம்? என்றவர் இங்கு பெட்ரோல் 1 லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பது உங்களுக்கு தெரியுமா? என்றார்.
 
1989  முதல் 99 வரை இருபது வருடங்களில் 1850 நாட்கள் கடை அடைப்பிலும், வேலை நிறுத்தத்திலும் கழிந்து விட்டது. இப்படி இருந்தால் வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? என்றவர் எங்களை அழைத்து சென்று தனது கடையின் பின் பகுதியை காட்டினார்.
 
அதில் ஓட்டைகள் இருந்தன. இது என்ன தெரியுமா? என்றவர். ராணுவத்தினர் மொத்தமாக வருவார்கள். எங்கள் கடையில் சாமான்களை வாங்குவார்கள். பணம் கேட்டால் துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படி சுட்டதுதான் இந்த ஓட்டைகள் என்று விளக்கமளித்தார்.
 
எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.  பிறகு நாங்கள் காரில் ஏறி புகழ்பெற்ற ஸ்ரீநகரின் ஜாமியா மஸ்ஜிதுக்கு புறப்பட்டோம்.
 
எம். தமிமுன் அன்சாரி

தாங்கமுடியாத உற்சாகத்தால் டீ குடிக்க காசில்லை


பெங்களூரில் தண்ணி அடித்துவிட்டு குஷியாக இருக்க வந்த சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரை ஒரு கும்பல் மயக்க மருந்து தெளித்துஅடித்து உதைத்துரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்ஐபோன்பணம்நகைகளைப் பறித்துவிட்டுரோட்டில் வீசிவிட்டுச் சென்றது.
சென்னையை சேர்ந்தவர் ராஜ் (25) ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூர் வந்தார். இரவு 11 மணிக்கு பெங்களூர் கலாசிபாளையம் பஸ் நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வந்ததேகுடும்பத்தாரிடம் இருந்து தூரமாக இருக்கவும்தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருக்கவுமே.
பஸ்சை விட்டு கீழே இறங்கியதும் நேராக ஒரு பாருக்கு சென்று மூக்கு முட்ட குடித்தார். இதையடுத்து லாட்ஜில் ரூம் போட நடந்து சென்ற அவரை 
பெங்களூர் மருத்துவக் கல்லூரி அருகே ஒரு கும்பல் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியது.
இதையடுத்து அவர் மீது மயக்க மருந்தை வீசி அவரை மயக்கமடைய வைத்தது. அதன் பிறகு நடந்தது எதுவும் ராஜுக்குத் தெரியவில்லை. மறுநாள் அதிகாலை மணிக்கு மயக்கம் தெளிந்து சுய நினைவுக்கு வந்த அவர் பசவனகுடி மேம்பாலம் அருகே நேஷனல் கல்லூரிக்கு பக்கத்தில் ரோடோரத்தில் கிடந்தார்.
அவரிடம் இருந்த லேப்டாப்ஐ போன்லேப்டாப்தங்க சங்கிலிபிரேஸ்லெட்மோதிரங்கள்ரூ. 20,000 பணம் உள்பட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் பசவனகுடி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் செல்லவேஅவர்கள் உன்னை மயக்கப்படுத்தியது கலாசிபாளையம் என்பதால் அங்கே போய் புகார் கொடு என திருப்பி அனுப்பிவிட்டனர்.
அங்கு போனால்நீ மயங்கிக் கிடந்த இடம் பசவனகுடி. இதனால் அங்கே போ என மிரட்டினர். இதையடுத்து கடுப்பான ராஜ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பசவனகுடி போலீஸ் இன்ஸ்பெக்டரை வரவழைத்து டோஸ் விட்டதோடுவழக்குப் பதிவு செய்ய வைத்தனர். கையில் ஒரு பைசா கூட இல்லாமல்டீ குடிக்கக் கூட வழி இல்லாமல்பசியால் தவித்த ராஜ் கண்ணீர் விட அதைக் கண்ட போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்துகொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ராஜ்.. இது தேவையா?!

சமச்சீர்க் கல்விக்காகப் போராடிய ஹனீஃபா என்ற மாணவர்


மிழகக் கல்வியாளர்களின் நாற்பது ஆண்டுக் கனவுநிறைவேறி இருக்கிறது. தடை பல கடந்து வெற்றிக்​கொடியை நாட்டி இருக் கிறதுசமச்சீர்க் கல்வித் திட்டம்! 
பலரும் இதற்காக முயன்று இருந்​தாலும், 'இவர் கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு சில அமைப்புகள்தான் இதற்கு முக்கியக் காரணம்! இதில்பிரின்ஸ் கஜேந்திரபாபு என்ற தனி மனிதரின் போராட்டம் முக்கியமானது. 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’ எனும் அமைப்பின் மூலம்சமச்சீர்க் கல்விக்காகப் போராடி வருகிறார் இவர்.
தொலைபேசியிலும் நேரிலும் பலரின் பாராட்டு களில் நனைந்துகொண்டு இருந்த அவரை நாம் சந்தித்தபோது, ''மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் பாடத் திட்டங்களில் மதவாதக் கருத்துகளைச் சேர்த்துபிரச்னை உண்டானது. அடுத்து வந்த காங்கிரஸ் கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங்அனைத்து மாநிலங்களின் பாடத் திட்டங்களையும் திருத்தியமைக்க உத்தரவிட்டார். 2005-ல் உருவாக்கப்பட்ட 'தேசிய பாடத் திட்டக் கொள்கையின்படிபுதிய பாடத்திட்டம் இருக்க​வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிக்காகஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா http://www.vikatan.com/images/rupee_symbol.png 10 லட்சத்தை தேசிய கல்வி ஆராய்ச்சிபயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) வழங்கியது. தமிழகத்திலும் 2006-ல் தொடங்கிய இந்தப் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆனது.2009 அக்டோபரில் 'வரைவு பொதுப் பாடத்திட்டம்’ என இணையதளத்தில் இது வெளியிடப்பட்டது. இறுதியாகஎன்.சி.இ.ஆர்.டி-யின் பாடத்திட்டக் குழுவும் இதை ஆராய்ந்து, 'இது சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று 2009 நவம்பர் 25-ல் அறிவித்தது. அடுத்த இரண்டாவது நாளில்,சமச்சீர்க் கல்விக்கான அவசரச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது. இதனால்தான் சமச்சீர்க் கல்வி தமிழகத்துக்கு வந்தது. கருணாநிதி கொண்டுவந்தார் என்பதற்காக எதிர்ப்பவர்கள் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2006-ல் இருந்து கல்வியாளர்களும் மாணவர் அமைப்பினரும் சமச்சீர்க் கல்விக்காகப் போராடினர்.2006 செப்டம்பரில் முத்துக்குமரன் குழு அமைக்கப்பட்டு, 2007 ஜூலையில் அறிக்கை தந்தது. அதை ஆராய விஜயகுமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு... அதுவும் அறிக்கை தந்தது. ஆனால்தி.மு.க. அரசு சமச்சீர்க் கல்வி பற்றி வாய் திறக்கவே இல்லை. தமிழகக் கல்விக் குழு தயாரித்த 'பொதுப் பாடத் திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி. அங்கீகரித்தபின்புஅதை தி.மு.க. அரசும் அங்கீகரிக்கவேண்டிய கட்டம் வந்தபோதுதிடீரென சமச்சீர்க் கல்விக்கான அவசர சட்டத்தைக் கொண்டு​வந்தார்கள்

நவம்பர் 30-ம் தேதி கெசட்டில் வெளி​யிட்டு, 2010 பிப்ர​வரியில்தான் சட்டப் பேரவை மூலம் இந்த சட்டம் நிறைவேறியது. இதன்படி புத்தகத்தை அச்சடிக்க உத்தரவு பிறப்பித்த பிறகுதனியார் பள்ளிகள் தரப்பில் சமச்சீர் பாடத் திட்டத்தை எதிர்த்துநீதிமன்றம் சென்றனர்.
விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன் மற்றும் ஜனார்த்தன்ராஜா பெஞ்ச், 'சமச்சீர் பாடத் திட்டம் செல்லும். ஆனால்அந்தப் பாடத் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் புத்தகங்களைத் தீர்மானித்துக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிசெய்தது. ஆனால்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாகஒரு சட்டம் கொண்டுவந்து... அதனால் இரண்டு மாதம் குழந்தைகள் மனச் சித்ரவதைக்கு உள்ளாகிஒரு வழியாக அதே நீதிமன்றத்தால்பொதுப் பாடத்திட்ட உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு உள்ளது!''என்று முடித்தார் பிரின்ஸ்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தினரும் (எஸ்.எஃப்.ஐ.) அடுத்​தடுத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானவை. 2009 ஜூலை 14-ம் தேதிதலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்​தனர்.
''இந்தத் தாக்குதலில், ஹனீஃபா என்ற மாண வருக்கு தலையில் படுகாயம்.மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுஉயிருக்கே ஆபத்து! மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார். சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததாக இப்போது தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில்அதற்காகப் போராடிய மாணவனுக்குக் கிடைத்த பரிசு அப்படி!'' என்றார்,எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் ராஜ்மோகன்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) ஆகிய அமைப்புகள் செய்த போராட்டங்கள் ரொம்பவும் அதிரடி!
''எல்லோருக்கும் பொதுவான பாடத்​திட்டம் கூடாது என்பது சமூக அநீதி. உலகமயமாக்கலுக்கு ஏற்ப பொதுப் பாடத்திட்டம் இல்லை என்கிறது அ.தி.மு.க. அரசு. எனவே, 'மீண்டும் குலக் கல்வியைக் கொண்டுவரும் ஜெ. அரசின் முயற்சியை முறியடிப்போம்’ என்றுதான் களத்தில் இறங்கினோம். சென்னையில் 600 பேர் மறியல் செய்து, 63 பேர் சிறையில் அடைபட்டோம். கடலூர்திருச்சி,மதுரை என பல ஊர்களிலும் போராடியவர்களுக்கு ஒரு வாரத்துக்கும் மேல் சிறை. கடலூரில் 15வயது மாணவர் ஒருவரை 21 நாள் சிறார் சிறையில் அடைத்தது இந்த அரசு!'' என்றார்இந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் கணேசன்.
தி.மு.க.அ.தி.மு.க. கட்சிகளின் அரசியல் லாபநட்டக் கணக்குகளுக்கு அப்பால்தமிழ்ச் சமூகத்தின் சமநீதிக்கான ஒரு படிக்கல்லைத் தொட்டிருக்கும் இந்தத் தருணம்விடாப்பிடி போராட்டங்களுக்குக் கிடைத்த அர்த்தமுள்ள ஒரு பரிசுதான்!                                  நன்றி ஜூனியர் விகடன்


Friday, August 26, 2011

என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!


அல்லாஹும்ம இன்னக்க அஃப்வன்
 துஹிப்புல்
 அஃப்வ
 பஅஃபு அன்னி

பொருள் :

 யா அல்லாஹ்!
 நீயே பாவங்களை மன்னிக்கக்கூடயவன்.
 மன்னிப்பதை விரும்புபவன்.
 (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!

Tuesday, August 23, 2011

உணவு அளியுங்கள்


அவர்கள் இரவில் மிகவும் சொற்ப 
நேரமேயன்றி 

  தூங்கமாட்டார்கள். 
இரவின் கடைசி நேரங்களில்பாவமன்னிப்புத் தேடுவார்கள்"



(அல்குர்ஆன் - 51:17,18)

"ஸலாத்தை பரப்புங்கள், உணவு அளியுங்கள், உறவுகளை ஒட்டி வாழுங்கள், 
மக்கள் தூங்கும்போது தொழுங்கள்,நிம்மதியாக சொர்க்கம் செல்வீர்கள்"



அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் ( ரலி)
நூல் : அஹமத் 24193