Friday, June 3, 2011

இதயத்தின் தோழன்


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Mohammad Sultan

Monday, May 30, 2011

புகைத்தால் புற்றுநோய்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ஸ்டைல்' : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. 
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

மறுப்போம், மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி, குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.

விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும், ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
*
புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
*
புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம், 
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
*
எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த 
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.

நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
*
எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48
மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72
மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3
முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
*
ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10
ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல் 
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
-
டாக்டர் ஜெ.சங்குமணி, மதுரை. 98432 72876 .

புகைத்தால் புற்றுநோய் நிச்சயம் : *சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
*
நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
*
உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
*
சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
*
புகைப் பழக்கத்தை நிறுத்த தற்போது வாயில் மெல்லும் வகையில் சூயிங்கம், தோலில் ஒட்டிக் கொள்ளும் வகையில் நிகோட்டின் ஸ்டிக்கர் போன்றவை வந்துள்ளன.
-
டாக்டர் எம்.பழனியப்பன். மதுரை. 98421 16070

Tuesday, May 24, 2011

நெல்,கோதுமை etc..........


நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.
பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
சோளம்:- சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
கம்பு:- கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.
சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
வரகு:- நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகு:- தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.
கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.
கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.


Mohammad Sultan

Sunday, May 22, 2011

சென்னை மண்ணடி நிலத்தை மீட்க நடவடிக்கை

சென்னை மண்ணடியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பெண்கள் உருது நடுநிலைப் பள்ளி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது.

வலுக்கட்டாயமாக மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது நீதிமன்றத்தை அணுகிவிட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் 2009-ல் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தத் தடையை விலக்கி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க மாநகராட்சித் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை மண்ணடியில் உள்ள அங்கப்ப நாயக்கன் தெருவில் சென்னை உருது பெண்கள்  நடுநிலைப் பள்ளி உள்ளது. மொத்தமே 3 கிரவுண்ட் 1091 சதுர அடியில்தான் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ஏழை மாணவிகள்தான் இந்தப் பள்ளியில் அதிக அளவில் படிக்கின்றனர்.
இந்த நிலம் இஸ்லாமியர்களிடம் இருந்து 1913-14-ல் பெறப்பட்டது. தங்களது குழந்தைகளுக்குப் பயன்படும் என்பதால் இஸ்லாமிய சமுதாயத்தினர் இந்த இடத்தைக் குறைந்த விலைக்கு மாநகராட்சிக்கு அவர்கள் விற்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தப் பள்ளி அந்த இடத்தில் இயங்கி வந்தது. பள்ளியின் பின்புற வாசல் இப்ராஹிம் சாலையில் அமைந்திருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பின்புற வாசலை அடைத்து, அதற்குப் பின்னால் குழந்தைகள் விளையாடுவதற்காக இருந்த ஏறத்தாழ 1,380 சதுர அடி நிலத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக இருவாசல்கள் இருந்த பள்ளி, இப்போது ஒரே வாசல் கொண்டதாகவும், அளவில் மிகச் சிறியதாகவும் குறுகிவிட்டது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பான வழக்கில் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதேநாளில் உயர் நீதிமன்றத்தை அணுகிய ஆக்கிரமிப்பாளர்கள் தடை உத்தரவு பெற்றுவிட்டனர்.
கடந்த 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை அகற்ற இதுவரை சென்னை மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. அப்போதைய ஆளுங்கட்சியினர் தலையீடு இருந்ததுதான் இதற்குக் காரணம் என்று  கூறப்படுகிறது. இதற்கு அப்போதைய அரசு வழக்கறிஞர் உதவி இருக்கக்கூடும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் தடை உத்தரவு கோரும்போது அதை அவர் எதிர்க்காமல் இருந்திருக்கக்கூடும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் பேசியபோது, இந்தப் பள்ளியில் நாங்கள் புதிதாகச் சேர்ந்துள்ளோம். இந்தப் பள்ளிக்கு இரண்டு வாசல்கள் இருந்ததாகக் கேள்விப்பட்டோம். இப்போது அங்கே குறுக்கே சுவர் எழுப்பப்பட்டுள்ளதால் ஒரு வாசலை மட்டுமே மாணவிகள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனடியாகப் பள்ளியை ஆய்வு செய்த அவர் இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் மனுவையும் கொடுத்துள்ளார்.
பள்ளி நில ஆக்கிரமிப்பை மீட்பது குறித்து பழ.கருப்பையா கூறியது: கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், உயர் நீதிமன்ற தடையாணையை விலக்கி பள்ளி நிலத்தை மீட்க அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. பள்ளிகள், நடைபாதைகள் போன்ற பொதுஇடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
எனவே, இந்த ஆக்கிரமிப்பை அகற்றி உருது பள்ளிக்கான இடத்தை அதிமுக ஆட்சி மீட்டுக் கொடுக்கும். அதற்கு முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக இப்போதுதான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம் என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன். உருது பள்ளி நில ஆக்கிரமிப்பு விவகாரம் துறைமுகம் பகுதி முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



dinamani

Saturday, May 21, 2011

மாற்றங்கள் தேவை


ன்பின் பெற்றோர்களே!                    



ன்று முதல் இன்று வரை உலகத்தில் ரங்கேறிக்கொண்டிருக்கும் குற்றங்களுக்கும் அநியாயங்களுக்கும் காரணம் என்னஅல்லது காரணம் யார்என்பதைப் பற்றி சிந்தித்திருக்கின்றோமா?
அதற்கான காரணம்  வாழ்க்கையில் தங்களது பிள்ளைகளை   நல்ல முறையில் வழி நடத்தத் தவறும் பெற்றோர்களே (Parenting Failure) என்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

காரணம்;
மது பிள்ளைகள் கடுமையான தண்டனைகளுக் குற்படுத்துகின்றமை

பிள்ளைகள் தங்களது பெற்றோர்களிடத்திலிருந்து சரியான அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ளத் தவறுகின்றமை,

பிள்ளைகள் அவர்களின் நன்னடத்தையின் போது போதுமான பாராட்டுதலை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக சிறிய சிறிய தவறுகளுக்காக கடுமையான தண்டணைகளுக்கும் மோசமான வார்த்தைகளுக்கு உற்படுதல்

பிள்ளைகளின் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் ஆசைகளுக்கும் ஆவேசங்களுக்கும் உதவ பெற்றோர்கள் தவறுகின்றமை.

பிள்ளைகளின் உள்ளக் குமுறலை செவியுற பெற்றோர்கள் மறுக்கின்றமை.

உண்மையில் பெற்றோர்களின் இப்படிப்பட்ட மோசமான வழிநடத்தல்களும் அறிவீனமான அணுகுமுறைகளும் தான் காரணமாகும்.
ந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் உலகின் பெயர் சொல்லப்படுகின்ற மிக மோசமான குற்றவாளிகள்.

அன்றாட வாழ்க்கையின் எமது நடத்தைகளை சரிவர நோட்டமிட்டுப் பார்த்தால் இதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளமுடியும்
அதே நேரம் இதற்கான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளநல்ல எதிர்கால சமூகத்தை உருவாக்க வழி என்னஎன்று சிந்தித்தால் நான் மேலே சொன்னதற்கு எதிரான விடையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது பிள்ளைகளை மோசமாக வழிநடத்திய பெற்றோர்களுக்கு பதிலாக பிள்ளைகளை சரியான முறையில் வழிநடத்தும் பெற்றோர்கள் (Positive Parenting) என்பதுவாகும்.

இதற்கான உதாரணத்தை எமது சூழலிலே பெற்றுக் கொள்ளமுடியும்,
நல்லமுறையில் வளர்க்கப்படும் ஒரு பிள்ளையையும் அந்த பிள்ளையின் தாய் தந்தையையும் சரிவர நோட்டமிட்டுப் பார்த்தால் இதன் உண்மையை புரிந்து கொள்ளமுடியும்.

அதாவது அந்த குறிப்பிட்ட வீட்டில் அந்த மகன் அல்லது மகள் ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறுக்காக உடனே தண்டிக்க மாட்டார்கள்அதற்கு பதிலாக மகனே நீ செய்த இந்த விடயம் பிழைநீ இந்த பிழையை செய்வதற்குக் காரணம் அதாவது இது உனது தவறல்லஇது அந்த விடயத்திலுள்ள பிழையாகும்அதனால் திரும்பவும் அதே விடயத்தைச் செய்யாதே என்று அந்த பிள்ளையை அந்த தவறிலிருந்து தடுத்துவிடுகின்றார்கள்.

இந்த பாடத்தை அந்த பிள்ளை தனது பாடசாலை புத்தகத்தில் படிக்கமுன் வீட்டில் பெற்றோர்களின் பாடபுத்தகத்தில் படித்துவிடும்.
அதே போல் பிள்ளைகளை வளர்க்கின்ற விடயத்தில் நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்;

ஒவ்வோரு நாளும் எமது பிள்ளைகளை ஒரு வெற்றியாளனை பார்ப்பது போலும் ஒரு வெற்றியாளனுடன் கதைப்பது போலும் நடந்து கொள்ள வேண்டும்நாங்கள் அவர்களை விரும்புகின்ற நடத்தைகளை கற்றுக் கொடுத்தல்பிறர் எங்களை நேசிப்பதற்கான வழிவகைகளை கற்றுக்கொடுத்தல்செல்கின்ற இடமெல்லாம் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள தேவையானவைகளை கற்றுக் கொடுத்தல்.
நாங்கள் பெற்றோர் என்ற நிலையை அடைவதற்கு முன்னர் நாங்களும் எமது பிள்ளைகளின் வயதை தாண்டி வந்திருக்கின்றோம்நிறைய தோல்விகளை சந்திருக்கின்றோம்குடிகூத்துஅநியாயம்பொய்போலி வேசம்விபச்சாரம்,கொலைகொள்ளைகடத்தல்தற்கொலை முயற்சிவிவாகரத்து என்று தேவையற்றதண்டனைக்குரிய  எல்லாவற்றிலும் அனுபவம் பெற்றிருக்கின்றோம்.

இந்த தேவையற்ற அனுபவங்கள் எமது பிள்ளைகளுக்குத் தேவையில்லை,அவர்கள் தவறுகளிலிருந்து விலகிசிரித்த முகத்துடன் சந்தோஷமாக வாழ வழி செய்வோம்,                 பெற்றோர்களே தயாராகுங்கள்சபதம் எடுப்போம், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

இன்ஷா அல்லாஹ் எனது இந்த சிறிய தொகுப்பில் எல்லா வயதுடையவர்களுக்கும் எல்லா வயதுடைய பிள்ளைகளை வளர்க்கின்ற பெற்றோர்களுக்கும் அது போல் தன்னை தானே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்ற பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய வகையில் விடயங்களை உள்ளடக்க முயற்சித்திருக்கின்றேன்

முழுமையாக உள் நுழைவதற்கு முன் எல்லா பெற்றோர்களுக்கும் முக்கியமாக இரண்டு விடயத்தை ஞாபகமூட்ட வேண்டும்அதாவது;

நிபந்தனையற்ற முறையில் எமது பிள்ளைகளை காதலிப்போம்:
எமது குழந்தை எம்மை மதிக்கவேண்டும்கெளரவிக்க வேண்டும்எமது அந்தஸ்தை உணர வேண்டும் என்பதற்கல்லாமல் அது உண்மையில் எமது குழந்தை என்பதற்காக நாம் அவர்களை காதலிக்க வேண்டும்எமது முழுமையான அன்பை செலுத்த வேண்டும்.

அந்த காதலை எமது நடத்தையில் காண்பிப்போம்.
எமது பிள்ளைகளை அடிக்கடி காணும் போது அவர்களை கட்டித்தழுவ வேண்டும்,  
அவர்கள் ஆசைப்படும் நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும்,                                              அவர்களின் பாடசாலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுதல்,                                                   பெற்றார் சங்க கூட்டங்களுக்கு சமூகமளித்தல்,   
பாடசாலை நிகழ்ச்சிகளில் அவர்கள் நிகழ்ச்சி செய்யும் போது அவர்களின் நடத்தைகளை அவர்களுக்கு முன்னாலேயே கண்டு ரசித்தல்,  அவர்களின் அந்த சிறிய பெரிய சாதனைக்காக வேண்டி அவர்களை அடிக்கடி புகழுதல்,                                              அவர்கள் சந்தோஷமாக அழைக்கும் இடங்களுக்கு செல்லுதல்,                                         அவர்களுடன் அந்த சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுதல் என்று அனைத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.

நபி (ஸல்அவர்கள் பிள்ளைகளை எப்படி காதலித்திருக்கின்றார்கள்எப்படி அன்பு செலுத்திருக்கின்றார்கள்  என்பதற்கு கீழ் காணும் சில உதாரணங்கள் போதுமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார்  என்றே எண்ணுகின்றேன்.        
                    
நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்)"அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?'' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.                                                                        
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),                                                                                                         ஆதாரம் :        புகாரி 6203

ஒர் ஏழைப் பெண் தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு,  ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன!  தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.  அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்'' என்றோ அல்லது"அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்'' என்றோ கூறினார்கள்.                                                                                              
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),                                                                          
நூல் :          முஸ்லிம் 4764)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி),  "எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்'என்று கூறினார்கள்.                                                                                                             
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),                                                  
ஆதாரம் : புகாரி 5997

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களாநாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்று கூறினார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  "அல்லாஹ் உமது  இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள்.                                                            
அறிவிப்பவர் : அயிஷா (ரலி)   
ஆதாரம் :  புகாரி

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                                     
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி),                                                    
ஆதாரம் : புகாரி 707, 709, 7105998

ஏன் எமது பிள்ளைகளிடத்தில் முதலில் அன்பை விதைக்க வேண்டும் என்றால்,அன்பும் காதலும் எதையும் சாதிப்பதற்கு மிகமுக்கிய சாதனங்களாகும்.

எமது பிள்ளைகள் நாம் சொல்லுவது போல் கேட்க வேண்டும் என்றால்நாம் சொல்லுவதை எமது பிள்ளைகள் உரிய நேரத்தில் செவியுற்று செயற்பட வேண்டுமென்றால் அவர்களை அன்பான முறையில் வளர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

எமது அன்பை செயல் ரீதியாக காட்டுவதற்கு மிகமுக்கியமான ஊடகம்தான் நாம் வீட்டில் சில வேலைகளை செய்யும் போது அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்

உதாரணமாக வீட்டை சுத்தம் பண்ணுதல்பூ மரங்களை நடல்கைப் பணிகளை செய்தல்சித்திரங்களை வரைதல்வீட்டை அலங்கரித்தல் இவ்வாறு அனைத்து காரியங்களிலும் பிள்ளைகளை என்னுடம் இணைத்துக் கொள்ளவேண்டும்.இவ்வாறு இணைந்து செய்யும் போது அவர்களின் நடத்தைகளை இனங்கண்டு பாராட்டவேண்டும்.

மேலே அடையாளப்படுத்திய இரண்டு விடயங்களும் எந்த பெற்றோர்களிடத்தில் நடைமுறையில் இருக்கின்றதோ அவர்கள்  தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதில் 60 சதவீத வெற்றியை பெற்றுவிட்டார்கள் என்பதே உண்மை.

மிகுதி 40 சதவீதத்தையும் வென்று எமது பிள்ளைகளை ஒரு வெற்றியாளனாக்குவதற்கு கீழ் வரும் விடயங்களை நடைமுறைப்படுத்தத் தயாராகுவோம்.

Thursday, May 19, 2011

விழித்துக்கொண்ட முஸ்லிம்கள், அலறும் அரசியல் கட்சிகள்

அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.
அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.அசாம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தலில், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முஸ்லிம் மக்கள், மதம் சார்ந்த கட்சிக்கு இம்முறை ஓட்டளித்திருப்பது, முன்பு எப்போதும் நடக்காதது என்று, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில், மவுலானா பத்ருதின் அஜ்மல் குவாஸ்மி தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, 75 இடங்களில் தனித்து போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில், குனாலிகுட்டி தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 24 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றது. அசாமில், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு, அதிக இடங்களில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், இக்கட்சிகள், அதிகாரம் படைத்த கட்சிகளாக, இம்முறை உருவெடுத்துள்ளன.


முஸ்லிம் சமுதாய கட்சிக்கு, அந்த சமுதாயத்தினரின் ஓட்டு என்ற நிலை உருவாகியுள்ளது. அசாமில் முஸ்லிம்கள் 30 சதவீதமும், கேரளாவில் 25 சதவீதமும் உள்ளனர். வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து, இச்சமுதாய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும், இக்கட்சி தலைவர்கள், அதிகளவில் கவனம் செலுத்தி உள்ளனர்.இந்த மாநிலங்களுக்கு மாறாக, மேற்குவங்கத்தில், எப்போதும், இடது சாரி கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த முஸ்லிம்கள், சமீபத்திய தேர்தலில், திரிணமுல் தலைமையிலான கூட்டணிக்கு ஓட்டுகளை அளித்துள்ளனர். அதேசமயம், அசாம் மற்றும் கேரளா தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, அதிகளவில் விளம்பரம் செய்தால், இந்த மாநிலங்கள், தவறான முன் உதாரணங்களாக மாறிவிடும் என்று அரசியல் வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பீகார் மாநிலத்திலும், முஸ்லிம்கள் அதிகம். கடந்தாண்டில், அம்மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஓட்டுகள் அனைத்தும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பக்கம் சாய்ந்தன. இதே நிலைமை தான் இம்முறை மேற்குவங்கத்திலும் பிரதிபலித்துள்ளது.



அதேபோன்று தமிழகத்திலும் முஸ்லிம்களின் பாரம்பரியமான் திமுக ஒட்டு வங்கியை மனித நேய மக்கள் கட்சி உடைத்து,அதிமுக அணிக்கு பெற்றுத்தந்ததால் திமுக தோற்றுப்போனது என்ற திமுகவின் புலம்பலும் கவனிக்கத் தக்கது.


விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதை முஸ்லிம்கள் இந்திய அளவில் நன்கு உணரத்தொடங்கியுள்ளனர்.இது ஒரு நல்ல முன்னேற்றம்.

Wednesday, May 18, 2011

அமெரிக்காவை கண்டுபிடித்தது சீன முஸ்லிம்கள்!!

நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் 15 தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார்.

அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்? கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He,) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது.

சீன முஸ்லிம்கள் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள்.

இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள். இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் 8 கோடியில் இருந்து 10 கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர்.